காவிரியில் மணல் கடத்தல் 4 மாட்டு வண்டி பறிமுதல்

X
Krishnarayapuram King 24x7 |31 Dec 2025 12:46 PM ISTமாயனுார் போலீசார் வழக்குப்பதிந்து, மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்தனர்
கிருஷ்ணராயபுரம் அடுத்த திருக்காம்புலியூர், காவிரி ஆற்றுப்படுகை செல்லாண்டி அம்மன் கோவில் பகுதியில், ஆற்று மணல் கடத்துவ தாக மாயனூர் நீர்வளத்துறை உதவி பொறி யாளர் கார்த்திக்கிற்கு, தகவல் கிடைத்தது. இதையடுத்து, நேற்று முன்தினம் காலை, 11:30 மணிக்கு அப்பகுதியில் கண்காணிப்பில் ஈடு பட்டனர். அப்போது, நான்கு மாட்டு வன்டியில் மணல் கடத்தியது தெரியவந்தது. தொடர்ந்து, ஒரு யூனிட் மணல் கடத்திய, 4 டயர் மாட்டு வண்டிகளை பிடித்து மாயனுார் போலீசில் ஒப்படைக்கப்பட்டது. இதில், மாட்டு வண்டி உரிமையாளர்கள், மணவாசி சத்ரியன், 25, ஆறுமுகம், 55,மலைக் கள்ளன், 46, இளங்கோவன், 43, ஆகிய நான்கு பேர் மணல் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. மாயனுார் போலீசார் வழக்குப்பதிந்து, மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்தனர்
Next Story
