பரமத்தி பி.ஜி.பி தனியார் கல்லூரி மாணவன் 4-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை போலீசார் தீவிர விசாரணை.

பரமத்தி பி.ஜி.பி தனியார் கல்லூரி மாணவன் 4-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை போலீசார் தீவிர விசாரணை.
X
பரமத்தி பி.ஜி.பி தனியார் கல்லூரி மாணவன் 4-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை. விடுதியில் போதை பொருள் வைத்திருந்ததாக மாணவனை ஆசிரியர்கள் விசாரித்த போது விபரீதம் போலீசார் தீவிர விசாரணை.
பரமத்தி வேலூர், ஜன. 11 : நாமக்கல் மாவட்டம் பரமத்தியில் பி.ஜி.பி கல்வி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த கல்வி நிறுவனத்திற்கு உட்பட பிஜிபி பார்மசி கல்லூரியில் கடலூர் மாவட்டம் பதிகுப்பத்தை சேர்ந்த ரங்கபாஸ்கர் என்பவரது மகன் யோகேஷ் ( வயது 21) என்பவன் பி.பார்ம் 3-ம் ஆண்டு விடுதியில் தங்கி படித்து வந்துள்ளான். விடுதியில் தங்கி படிக்கும் மாணவர்கள் நேற்று இரவு பட்டாசு வெடித்து கொண்டாடியுள்ளனர். இந்த நிலையில் அறையில் பட்டாசு யார் வைத்துள்ளார்கள் என ஆசிரியர்கள் ஒவ்வொரு அறையாக சென்று சோதனையிட்டுள்ளனர். அப்போது யோகேஷ் தங்கியிருந்த அறையில் அவரது பையில் சோதனை செய்தபோது போதைப் பொருள் இருந்ததாக தெரிகிறது. இதனையடுத்து மாணவன் யோகேஷை அழைத்து கொண்டு கல்லூரி முதல்வர், ஆசிரியர்கள் விசாரித்துள்ளனர். மேலும் பெற்றோரை அழைத்து வர சொல்லி மாணவனிடம் கூறியுள்ளனர். இதில் மனமுடைந்த கல்லூரி மாணவன் யோகேஷ் பார்மசி கல்லூரியின் 4-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டான். இதனால் அதிர்ச்சி அடைந்த கல்லூரி நிர்வாகம், மாணவர்கள் பரமத்தி போலீஸ் ஸ்டேஷனிற்கு தகவல் அளித்தனர். இதனிடையே மாணவனின் உடலை சகமாணவர்கள் மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதனையடுத்து யோகேஷ்வுடன் படிக்கும் சகமாணவர்கள், விடுதி மாணவர்கள் சுமார் 100 க்கும் மேற்பட்டோர் நாமக்கல் அரசு ஆஸ்பத்திரி முன்பு குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. எந்தவிதமான அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க அரசு ஆஸ்பத்திரி மற்றும் கல்லூரியில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். இந்நிலையில் மாணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தை அடுத்து கல்லூரிக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
Next Story