வீட்டின் கதவை உடைத்து 4 சவரன் தங்க நகைகள், வெள்ளி பொருட்கள் மற்றும் 1.20 லட்சம் திருட்டு
Perambalur King 24x7 |24 Dec 2025 8:12 PM ISTமணி கொடுத்த புகாரின் பேரில் பெரம்பலூர் நகர போலீசார் வழக்கு பதிவு செய்து மணியின் வீட்டில் கைவரிசை காட்டிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர். மேலும் மோப்பநாய் பரிசோதனையும் கைவிரல் ரேகை பதிவுகளும் எடுக்கப்பட்டுள்ளது.
பெரம்பலூரில் பூட்டி இருந்த வீட்டின் கதவை உடைத்து உள்ளே 4 சவரன் தங்க நகைகள், வெள்ளி பொருட்கள் மற்றும் 1.20 லட்சம் ரொக்க பணத்தை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக சாலையில் உள்ள பிரம்மா நகரை சேர்ந்தவர் மணி(34). இவர் குடும்பத்துடன் நேற்று மாலை புது நடுவலூர் கிராமத்தில் உள்ள உறவினர் வீட்டு விசேஷத்திற்கு சென்று விட்டு இன்று முற்பகல் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்ட மணி, உள்ளே சென்று பார்த்தபோது வீட்டின் அறையில் இருந்த பீரோக்கள் அனைத்தும் உடைக்கப்பட்டு அதன் உள்ளே இருந்த பொருட்கள் சிதறி கிடந்ததோடு பீரோவில் வைக்கப்பட்டிருந்த 4 சவரன் தங்க நகைகள், 1.20 லட்சம் ரொக்க பணம் மற்றும் அரை கிலோ மதிப்புள்ள வெள்ளி நகைகளும் காணாமல் போயிருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து மணி கொடுத்த புகாரின் பேரில் பெரம்பலூர் நகர போலீசார் வழக்கு பதிவு செய்து மணியின் வீட்டில் கைவரிசை காட்டிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர். மேலும் மோப்பநாய் பரிசோதனையும் கைவிரல் ரேகை பதிவுகளும் எடுக்கப்பட்டுள்ளது.
Next Story



