ராசிபுரம் அருகே 40 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்த பசு மாடு உயிருடன் மீட்பு..

ராசிபுரம் அருகே 40 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்த பசு மாடு உயிருடன் மீட்பு..
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த அத்தனூர் அருகே உள்ள உடுப்பத்தான்புதூர் பகுதியை சேர்ந்த விஜயகுமார்(41) என்பவருக்கு சொந்தமாக விவசாய நிலம் உள்ளது.அவரது விவசாய நிலத்தில் ஆடு,கோழி,மாடு உள்ளிட்டவைகளை வளர்த்து வரும் நிலையில் மேச்சலுக்காக பசு மாடு வயலுக்கு அழைத்துச் சென்றுள்ளார். அப்போது வயலில் இருந்து பசு மாடு எதிர்பாராத விதமாக 40 அடி ஆழ விவசாய கிணற்றுக்குள் பசு மாடு திடீரென தவறி விழுந்தது இதைக் கண்ட விஜயகுமார் ராசிபுரம் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கவே சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் 1 மணி நேரத்திற்கு மேலாக போராடி பசுமாட்டை பொதுமக்களின் உதவியுடன் கயிறு கட்டி உயிருடன் மீட்டனர்...
Next Story