காவேரிப்பாக்கத்தில் பாம்பு கடித்து மூதாட்டி பலி! | கிங் நியூஸ் 24X7

X
பாம்பு கடித்து மூதாட்டி பலி-போலீஸ் விசாரணை
ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் அருகே உள்ள சேரி கிராமத்தை சேர்ந்தவர் நடராஜன் மனைவி ஆண்டாள் 70. இவர் நேற்று தனது வீட்டின் அருகில் இருந்த போது அவரை விஷப்பாம்பு கடித்து வாயில் நுரை தள்ளி கீழே விழுந்தார். அங்கிருந்தவர்கள் அவரை வாலாஜா அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனை கொண்டு சென்ற நிலையில் இன்று ஆண்டாள் உயிரிழந்துள்ளார். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story