தேசிய மக்கள் நீதிமன்றம் : ரூ.4.52 கோடி தீர்வு தொகை!

X
தூத்துக்குடியில் 6 அமர்வுகள், கோவில்பட்டியில் 2, ஸ்ரீவைகுண்டத்தில் 2, திருச்செந்தூர், விளாத்திகுளம், ஓட்டப்பிடாரம், சாத்தான்குளம் ஆகிய இடங்களில் தலா ஓர் அமர்வு என மொத்தம் 14 அமர்வுகள் நடைபெற்றன. மாவட்ட முதன்மை நீதிபதி (பொறுப்பு) தாண்டவன் தலைமை வகித்தார். இதில், வங்கி வாராக் கடன் வழக்குகளில் 699 வழக்குகள் விசாரணைக்கு எடுக்கப்பட்டு, 250 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. அதன் மொத்த தீர்வுத் தொகை ரூ.3 கோடியே 54 லட்சத்து 35,712 ஆகும். மேலும் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள 3,645 வழக்குகளில் 3,233 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. அதன் மொத்த தீர்வுத் தொகை ரூ.4 கோடியே 52 லட்சத்து 94,600 ஆகும். மொத்தம் 4,344 வழக்குகள் விசாரணைக்கு எடுக்கப்பட்டு 3,483 வழக்குகளில் தீர்ப்பு பிறப்பிக்கப்பட்டது. அதன் மொத்த தீர்வுத் தொகை ரூ.8 கோடியே 7 லட்சத்து 30,312 ஆகும். தொடர்ந்து தீர்வு காணப்பட்ட வழக்கின் மனுதாரருக்கு தீர்வாணைகளை மாவட்ட முதன்மை நீதிபதி வழங்கினார். இதற்கான ஏற்பாடுகளை தூத்துக்குடி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழுவின் செயலரும் சார்பு நீதிபதியுமான (பொறுப்பு) ஏ.பிஸ்மிதா, இளநிலை நிர்வாக உதவியாளர்கள் அருள்மணிராஜ், இசக்கியம்மாள் ஆகியோர் செய்திருந்தனர்.
Next Story

