உதயநிதி ஸ்டாலின் 49 வது பிறந்த நாளை முன்னிட்டு வாலிபால் போட்டியை பந்தை அடித்து துவக்கி வைத்தார் செந்தில் பாலாஜி.

உதயநிதி ஸ்டாலின் 49 வது பிறந்த நாளை முன்னிட்டு வாலிபால் போட்டியை பந்தை அடித்து துவக்கி வைத்தார் செந்தில் பாலாஜி.
உதயநிதி ஸ்டாலின் 49 வது பிறந்த நாளை முன்னிட்டு வாலிபால் போட்டியை பந்தை அடித்து துவக்கி வைத்தார் செந்தில் பாலாஜி. தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை தமிழக முழுவதும் உள்ள திமுகவினர் பல்வேறு போட்டிகள் மற்றும் நிகழ்ச்சிகள் வாயிலாக கொண்டாடி வருகின்றனர். கரூர் மாவட்டத்திலும் பல்வேறு நிகழ்ச்சிகள், போட்டிகள் நடைபெற்று வந்த நிலையில் இன்று கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட திருவள்ளுவர் மைதானத்தில் கரூர் மாவட்ட திமுக சார்பில் வாலிபால் போட்டி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அரவக்குறிச்சி எம் எல் ஏ இளங்கோ விளையாட்டுப் போட்டியை சேர்ந்த நடுவர்கள் விளையாட்டு வீரர்கள் திமுக கட்சி முக்கிய பிரமுகர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்த போட்டியை கரூர் மாவட்ட திமுக செயலாளரும் முன்னாள் அமைச்சர் மான செந்தில் பாலாஜி வாலிபால் பந்தை அடித்து போட்டியை துவக்கி வைத்தார். போட்டியில் பங்கேற்ற வீரர்கள் ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் அல்ல என்ற முனைப்போடு பந்தை லாவகமாக தட்டி விளையாடியதோடு கண்ணிமைக்கும் நேரத்தில் கட் அடித்து தங்கள் அணி வெற்றி பெறுவதற்கான முனைப்பை காட்டியது பார்வையாளர்களை பரவசப்படுத்தியது. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணிகளுக்கு முதல் பரிசாக 75,000, இரண்டாவது பரிசாக 50,000, மூன்றாவது பரிசாக 25,000, நான்காவது பரிசாக ரூபாய் 22,000 வழங்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story