வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டதில் 49,548 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.

X
Perambalur King 24x7 |19 Dec 2025 10:26 PM ISTபெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 147. பெரம்பலூர், 148. குன்னம் என இரண்டு சட்டமன்ற தொகுதிகளில் மொத்தமுள்ள 5,90,490 வாக்காளர்களில் SIR - (சிறப்பு தீவிர திருத்த முகாம்)
பெரம்பலூர் மாவட்டத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டதில் 49,548 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரமுகர்கள் முன்னிலையில் வரைவு வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தேர்தல் அலுவலருமான மிருணாளினி வெளியிட்டார். அதன்படி பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 147. பெரம்பலூர், 148. குன்னம் என இரண்டு சட்டமன்ற தொகுதிகளில் மொத்தமுள்ள 5,90,490 வாக்காளர்களில் SIR - (சிறப்பு தீவிர திருத்த முகாம்) அடிப்படையில் இறந்த போனவர்கள், நிரந்தர குடிமாற்றம், ஏற்கனவே பதிவு செய்யப்பட்டவர்கள், இதரர் என பெரம்பலூர் சட்டமன்ற தொகுதியில் 29,376 வாக்காளர்களும், குன்னம் சட்டமன்ற தொகுதியில் 20,172 வாக்காளர்களும் என மொத்தம் - 49,548 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். SIR - முகாமிற்கு பிறகு 5,40,942 வாக்காளர்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், பெரம்பலூர் சட்டமன்ற தொகுதியில் 1,36,304 ஆண் வாக்காளர்களும், 1,44,235 பெண் வாக்காளர்களும் 27 மூன்றாம் பாலினத்திவரும் என 2,80,566 வாக்காளர்கள் உள்ளனர். SIR - ன் படி 29 37 6 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர் அதனையடுத்து குன்னம் சட்டமன்ற தொகுதியில் 1,28,817 ஆண் வாக்காளர்களும் 1,31,556 பெண் வாக்காளர்களும் 3 மூன்றாம் பாலின வாக்காளர்களும் என 2,60,376 வாக்காளர்கள் உள்ளனர். இந்த தொகுதியில் SIRன் படி 20,712 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில் பெரம்பலூர் மாவட்டத்தில் 2,65 .121 ஆண் வாக்காளர்களும் 2,75,791 பெண் வாக்காளர்களும் 30 மூன்றாம் பாலினத்தவரும் என மொத்தம் 5,40,942 வாக்காளர்கள் புதிய வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். மாவட்டத்தில் 49,548 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story
