அழகாபுரி அணையில் இரும்பு திருடிய 5 பேர் கைது

அழகாபுரி அணையில் இரும்பு திருடிய 5 பேர் கைது
X
வேடசந்தூர் அருகே அழகாபுரி அணையில் உள்ள குடோனில் 65 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள இரும்பு பொருட்களை திருடிய 5 பேர் கைது
திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் அருகே உள்ள அழகாபுரியில் குடகனாறு அணை உள்ளது. இது நீர்வளத் துறைக்கு சொந்தமான குடோன் ஒன்று உள்ளது. இதில் அனைக்கு தேவையான இரும்பு கம்பிகள், பைப்புகள் தகர சிட்டுகள் உள்ளிட்ட தளவாட பொருட்களை இருப்பு வைத்துள்ளனர். இந்த நிலையில் நேற்று அதிகாலை மர்ம நபர்கள் குடோனின் பூட்டை உடைத்து உள்ள இருந்து 65 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள இரும்பு பிளேட், இரும்பு சென்ட்ரிங் சீட்டுகள் உள்ளிட்ட பொருட்களை திருடி டாடா ஏசி வேனில் ஏற்றிக் கொண்டிருந்தனர். சத்தம் கேட்டு குடோனின் வாட்ச்மேன் பரமசிவம் மற்றும் ஊழியர் மகேந்திரன் குடோனுக்கு சென்றபோது, மர்ம நபர்கள் திருடிய பொருட்களை வேனில் ஏற்றிக் கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர். இது குறித்த புகாரின் பேரில் கூம்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் குடோனில் இருந்து இரும்பு பொருட்களை திருடிச் சென்றது பழனி அருகே உள்ள சாமிநாத புரத்தைச் சேர்ந்த ராஜா(26), சிவசங்கர்(23), சசிகுமார்(19), தாமரைச்செல்வன்(40), திருப்பூர் பார்கவ பாளையத்தை சேர்ந்த சஞ்சய் குமார்(21) என்பது தெரியவந்தது. அதனைத்தொடர்ந்து வேடசந்தூரில் பதுங்கி இருந்த 5 பேரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Next Story