வெண்ணை மலையில் நடைபெற்ற தமிழ் தேசிய பார்வர்ட் பிளாக் கட்சியின் கூட்டத்தில் 5 தீர்மானங்கள் நிறைவேற்றம்.
Karur King 24x7 |4 Jan 2026 5:54 PM ISTவெண்ணை மலையில் நடைபெற்ற தமிழ் தேசிய பார்வர்ட் பிளாக் கட்சியின் கூட்டத்தில் 5 தீர்மானங்கள் நிறைவேற்றம்.
வெண்ணை மலையில் நடைபெற்ற தமிழ் தேசிய பார்வர்ட் பிளாக் கட்சியின் கூட்டத்தில் 5 தீர்மானங்கள் நிறைவேற்றம். கரூர் அடுத்த வெண்ணைமலை பகுதியில் உள்ள தனியார் கூட்டரங்கில் தமிழ் தேசிய பார்வர்ட் பிளாக் கட்சியின் ஆலோசனைக் கூட்டம் மற்றும் புதிய நிர்வாகிகள் இணைப்பு விழா கட்சியின் மாவட்ட பொதுச் செயலாளர் காமேஸ்வரன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தின் நிறைவில் செய்தியாளர்களை சந்தித்த கட்சியின் நிறுவனத் தலைவர் சங்கிலி, வெண்ணைமலை பகுதியில் கடந்த 50 ஆண்டுகளாக வசித்து வரும் பொது மக்களை தமிழக அரசு தொடர்ந்து வெளியேற துன்புறுத்தி வருவதை கட்சியின் சார்பில் வன்மையாக கண்டிப்பதாக தெரிவித்தார். மேலும் வெங்கமேடு பகுதியில் ரிசர்வ்டு ஏரியா 13 ஏக்கரில் வசித்து வரும் பொது மக்களையும் வெளியேற சொல்லி துன்புறுத்துவதை எதிர்த்து உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.இதன் தீர்ப்பு வரும் வரை மக்களை வெளியேற்றக் கூடாது என்று அரசுக்கு கோரிக்கை விடுப்பதாகவும் தெரிவித்தார். மேலும், கரூர் நரசிம்மபுரத்தில் வேளாண் கல்லூரி தொடங்கப்பட்டு கடந்த மூன்று ஆண்டுகளாக போதிய கட்டிட வசதி இல்லாமல் மண்டபத்தில் செயல்பட்டு வருவதால், மாணவர்களுக்கு போதிய அடிப்படை வசதி இல்லாமல் மாணாக்கர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து மாணாக்கர்கள் பயன்பெறும் வகையில் புதிய வேளாண் கல்லூரிக்கு புதிய கட்டிடம் கட்டித் தர வேண்டும் எனக் கூறினார். தொடர்ந்து பேசிய அவர் கரூர் மாவட்டத்தில் தொடர்ந்து கொள்ளை போகும் மணல் கொள்ளையை தடுக்க வேண்டும் எனவும்,அதனை மீறி மணல் கடத்தலில் ஈடுபடுபவர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து நடவடிக்கை எடுத்து காவிரி ஆற்றை காப்பாற்ற வேண்டும் என தெரிவித்தார்.
Next Story



