திருச்செங்கோடு கே எஸ் ஆர் கல்வி நிறுவனங்களில் 5 ஆயிரத்திற்கும் அதிகமான மாணவ மாணவிகள் பங்கேற்ற பொங்கல் விழா
Tiruchengode King 24x7 |10 Jan 2026 5:29 PM ISTதிருச்செங்கோடு கே எஸ் ஆர் கல்வி நிறுவனங்களில் 5 ஆயிரத்திற்கும் அதிகமான மாணவ மாணவிகள் பங்கேற்ற பொங்கல் விழா தமிழர்களின் கலையான தப்பாட்டம் பொய்க்கால் குதிரை மயிலாட்டம் பொய்க்கால் ஆட்டம் கரகாட்டம்சிலம்பம் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றதுநிகழ்ச்சியில் திரைப்பட நடிகர் நடிகைகள் கலந்து கொண்டனர்
ஜாதி மத இன மனப்பான்மை கடந்து அனைவரும் தமிழர் என ஒன்று திரண்டு கொண்டாடும் பொங்கல் திருவிழாவை திருச்செங்கோடுகே எஸ் ஆர் கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த சுமார் 5,000 அதிகமான மாணவ மாணவிகள் 108 பொங்கல் வைத்து கொண்டாடி மகிழ்ந்தனர் முன்னதாகதமிழர்களின் பாரம்பரிய கலைகளான சிலம்பாட்டம் தப்பாட்டம் பொய்க்கால் குதிரை கரகாட்டம் பொய்க்கால் ஆட்டம்,புலியாட்டம்ஆகியவற்றுடன்மாணவன் மாணவிகள் திரைப்பட பாடல்களுக்கு ஆடிய படியும்நுழைவு வாயில் இருந்து வந்தனர்.பொங்கல் விழா நிகழ்ச்சியைகல்வி நிறுவனங்களின் ட்ரஸ்ட்டி ராஜம்மாள் ரங்கசாமி,அட்மின் இயக்குனர் மோகன் ஆகியோர் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தனர் துவக்க விழா நிகழ்ச்சியில் திரைப்பட நடிகர் ஆரி அர்ஜுனன் திரைப்பட நடிகை அதுல்யா ரவிதிரைப்பட பின்னணி பாடகர் நாட்டுப்புற கலைஞர் அந்தோணி தாசன்ஆகியோர் மாணவ மாணவிகளுடன் கலந்து கொண்டனர். தொடர்ந்து நுழைவு வாயில் இருந்துவிளையாட்டு மைதானம் வரை மாணவ மாணவிகள் திரைப்பட பாடல்கள் ஆடியோ படி ஊர்வலமாக வந்தனர் ஜல்லிக்கட்டு காளைகள் ஊர்வலத்தில் அழைத்து வரப்பட்டது.தொடர்ந்து மாலை வரை இசைக்கச்சேரி நடிகர் நடிகைகளின் கலை நிகழ்ச்சிகள் என பல நிகழ்ச்சிகள் நடக்க உள்ளது.108பொங்கல் வைத்ததில் ஒருபொங்கல் பானையில் பி எட் கல்லூரி மாணவர்கள்பொங்கல் வைத்தனர் தாளத்திற்கு ஏற்றபடிகுதிரை நடனமாடியது பார்வையாளர்களை கவர்ந்தது கலை நிகழ்ச்சிகள் நடைபெற்ற மேடை அருகே குடிலில் அமைக்கப்பட்டு தமிழர்களின் பாரம்பரிய உணவுகள் மற்றும் கைரேகை பார்ப்பது சோழி ஜோதிடம் பார்ப்பது கிளி ஜோதிடம் பார்ப்பது ஆகிய நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டது
Next Story


