மர்ம நபர்கள் 5 சவரன் நகை மற்றும் 45 ஆயிரம் பணதை கொள்ளை!
புதுக்கோட்டை மருதுபாண்டியன் நகரில் வசித்து வருபவர் பிரேம்ராஜ், ஓய்வு பெற்ற அரசு ஊழியரான இவர் நேற்று தனது சொந்த ஊரான நாகை மாவட்டத்திற்கு சென்றுள்ளார். இந்த நிலையில் அவரது மனைவி நிர்மலா மட்டும் தனியாக வீட்டில் இருந்த நிலையில், அதிகாலை சுமார் 3 மணிக்கு முகமூடி அணிந்து வந்த மர்ம நபர்கள் வீட்டின் பின்பக்க கதவு மற்றும் முன்பக்க கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று நிர்மலாவை மிரட்டி அவர் அணிந்திருந்த தங்கச் செயின் மற்றும் மோதிரங்கள், 45 ஆயிரம் ரூபாய் ஆகியவற்றை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். இது தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற திருக்கோகர்ணம் போலீசார், கைரேகை நிபுணர் வைத்து தடயங்களை சேகரித்து வருகின்றனர். இந்த சம்பவ இடத்திற்கு சென்ற மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அபிஷேக் குப்தா, ஆய்வு மேற்கொண்டு மர்ம நபர்களை விரைந்து கைது செய்ய நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார். ஏற்கனவே இதே பகுதியில் ஒரு ஆண்டுக்கு முன்பு கோயில் திருவிழாவில் நிர்மலா அணிந்திருந்த 7 பவுன் தங்கச் செயின் பறிபோன நிலையில், அதற்கான முடிவு தெரியாத நிலையில் மீண்டும், பாதிக்கப்பட்டவர் வீட்டிலேயே நகை கொள்ளை போய் உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது...
Next Story





