லாலாபேட்டை அருகே கஞ்சாவை பதுக்கி வைத்த இளைஞர் கைது 50 கிராம் கஞ்சா பறிமுதல்.
Karur King 24x7 |1 Dec 2024 5:56 AM GMT
லாலாபேட்டை அருகே கஞ்சாவை பதுக்கி வைத்த இளைஞர் கைது 50 கிராம் கஞ்சா பறிமுதல்.
லாலாபேட்டை அருகே கஞ்சாவை பதுக்கி வைத்த இளைஞர் கைது 50 கிராம் கஞ்சா பறிமுதல். கரூர் மாவட்டம், லாலாபேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், கஞ்சாவை பதுக்கி வைத்திருப்பதாக சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் சக்திவேலுக்கு தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் நவம்பர் 30ஆம் தேதி காலை 7 மணி அளவில் லாலாபேட்டை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது அப்பகுதியில் உள்ள பகவதி அம்மன் கோவில் தெரு அருகே உள்ள கொடிக்கால் தெருவில் கஞ்சாவை பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பதுக்கி வைத்திருந்த ரூபாய் 500 மதிப்புள்ள 50 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்த காவல்துறையினர், இது தொடர்பாக விசாரணை மேற்கொண்ட போது, கரூர் மாவட்டம், கிருஷ்ணாபுரம் தாலுக்கா, லாலாபேட்டை, கொடிக்கால் தெருவை சேர்ந்த ரமேஷ் மகன் யோகேஸ்வரன் வயது 24 என்பவர் கஞ்சாவை பதுக்கி வைத்தது தெரியவந்தது. உடனே யோகேஸ்வரனை கைது செய்து அவர் மீது வழக்கு பதிவு செய்தனர் லாலாபேட்டை காவல் துறையினர்.
Next Story