நாட்றம்பள்ளி அருகே 50ரூபாய்க்கு அடிதடி. இருவர் மண்டை உடைந்ததால் பரபரப்பு. சம்பவம் குறித்து போலீசார் விசாரணை.*
திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அருகே 50ரூபாய்க்கு அடிதடி. இருவர் மண்டை உடைந்ததால் பரபரப்பு. சம்பவம் குறித்து போலீசார் விசாரணை.* திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி பேருந்து நிலையம் அருகே சுமார் 30 வருட காலமாக ஜோதிப் புட்வேர் என்கிற பெயரில் காலணிகளை விற்று வருபவர் அபிப் ரகுமான். இந்நிலையில் இவரது கடைக்கு இவரது மகன்கள் முகமது உசேன் முகமது இர்ஃபான் ஆகியோர் தந்தைக்கு உதவியாக வியாபாரம் செய்து வந்துள்ளனர். அப்போது அதே சுற்று வட்டார பகுதியைச் சேர்ந்த எல்லம்மாள் என்பவர் பேரனுக்கு காலனி எடுப்பதற்காக இவருடைய கடைக்கு வந்து ஐநூறு ரூபாய் கொடுத்து 180 ரூபாய் மதிப்புள்ள காலனியை எடுத்து செல்லும்போது மீத தொகையில் இரண்டு 50 ரூபாய் கொடுத்துள்ளார். அந்த மீதத்தொகை 50 ரூபாயில் ஒன்று கிறுக்கல்கள் இருந்ததின் காரணமாக இது செல்லாது என்று ஒரு சில கடைகளில் வாங்க மறுத்ததின் காரணமாக தன்னுடைய மகன் மாரிமுத்து விடும் இதை காலனி கடைக்காரர் பாயிடம் திரும்ப கொடுத்துவிட்டு வாங்கி வர சொல்ல அறிவுறுத்ததின் பெயரில் மாரிமுத்து அங்கே சென்றபோது இந்த 50 ரூபாய் நோட்டு நான் கொடுக்கவில்லை என்று வாக்குவாதம் முற்றி அது கைகலப்பாக மாறி முகமது உசேன் மற்றும் மாரிமுத்து ரத்த கலரியில் மண்டை உடைந்து சாலையில் ஓடும் போது அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்துள்ளனர். சம்பவம் தொடர்பாக அரசு மருத்துவமனைக்குச் சென்ற நாட்றம்பள்ளி காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 50 ரூபாய்க்கு இருவர் மாறி மாறி மண்டையை உடைத்துக் கொண்ட சம்பவம் நாற்றம்பள்ளி சுற்றுவட்டார பகுதிகளில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Next Story



