ஏ.டி.எம்.இல் தவற விட்டவரிடம் 50 ஆயிரம் பணம் ஒப்படைத்த போலீசார்

X
Komarapalayam King 24x7 |17 Nov 2025 6:44 PM ISTகுமாரபாளையம் ஏ.டி.எம்.இல் தவற விட்டவரிடம் போலீசார் 50 ஆயிரம் ரூபாய் பணத்தை ஒப்படைத்தனர்.
குமாரபாளையம் அருகே வளையக்காரனூர் பகுதில் வசிப்பவர்கள் கார்த்திகேயன், 38, புனிதா, 34. கட்டிட கூலி வேலை. இவர்களுக்கு ஜினார்த், 13, தங்கை மது வர்ஷா, 19. உள்ளனர். இருவரும் குமாரபாளையம் அருகே உள்ள சங்கர் சிமெண்ட் ஆலை வளாகத்தில் செயல்பட்டு வரும் அரசு உதவி பெறும் சங்கர் மேல்நிலைப்பள்ளியில் படித்து வருகிறார்கள். ஜினார்த், 7ம் வகுப்பும், மதுவர்ஷா, 4ம் வகுப்பும் படித்து வருகிறார்கள். இவர்கள் நால்வரும் குமாரபாளையம் அருகே சேலம் கோவை புறவழிச்சாலையில் உள்ள வட்டமலை பகுதியில் உள்ள, தனியார் ஏ.டி.எம்.இல் நேற்றுமுன்தினம் இரவு 07:30 மணி சுமாருக்கு பணம் எடுக்க சென்றனர். ஏ.டி.எம். அறையில் ஜினார்த் மட்டும் சென்று பணம் எடுக்கும் பணியை செய்தான். அப்போது ஏ.டிஎம் மெசின் அருகில் இரசீது கிழித்து போட வைக்கப்பட்ட குப்பை தொட்டியில் 50,000. ரூபாய் பண்டல் சீல் உடைக்கப்படாமல் இருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தார். அதை.. வெளியில் நின்ற தன் அப்பா வசம் எடுத்து கொடுக்க.. அவர்கள் குடும்பத்துடன் வந்து போலீசில் பணத்தை ஒப்படைத்தனர். பணத்தை பெற்றுக்கொண்ட எஸ்.எஸ்.ஐ. மாதேஸ்வரன் இந்த சிறுவனுக்கு சால்வை அணிவித்து, புத்தகம் பரிசாக வழங்கி வாழ்த்து தெரிவித்தார். இந்த பணம் குறித்து போலீசார் விசாரணை செய்தனர். இதில் குமாரபாளையத்தை சேர்ந்த குருமூர்த்தி, 42, என்பவரது பணம் என்பது தெரியவந்தது. குருமூர்த்தியை வரவழைத்து, விசாரணை செய்தனர். குருமூர்த்தி ஏ.டி.எம். இல் பணம் வைக்கும் பணியை செய்து வருகிறார் என்றும், நேற்றுமுன்தினம் மாலை 04:30 ,மணியளவில் வட்டமலை எ.டி.எம். மெசினில் பணம் வைத்ததாகவும், வீட்டுக்கு வந்து கணக்கு சரி பார்த்த போது, 50 ஆயிரம் ரூபாய் குறைந்தது என்று தெரியவந்துள்ளது. இதையடுத்து, பணம் கண்டெடுத்த சிறுவனின் பெற்றோர், குமாரபாளையம் போலீசார் இவரிடம் தகவல் தெரிவிக்க, குருமூர்த்தி நேரில் வந்தார். இவரிடம் இன்ஸ்பெக்டர் தவமணி, சிறுவனின் பெற்றோர் உள்ளிட்டோர், குருமூர்த்தி வசம் 50,000. ரூபாய் பணத்தை ஒப்படைத்தனர்.
Next Story
