தைப்பூசத் திருவிழாமாபெரும் அன்னதான விழாவில் 50000 பேர் பங்கேற்பு
Kulithalai King 24x7 |2 Feb 2026 3:19 PM ISTஅனைத்திந்திய இந்து திருக்கோயில்கள் பாதுகாப்பு சங்கம் சார்பில் 2 நாட்கள் நடைபெற்ற அன்னதான விழா
அனைத்திந்திய இந்து திருக்கோயில்கள் பாதுகாப்பு சங்கம் சார்பில் தைப்பூச திருவிழா முன்னிட்டு கரூர் மாவட்டம் குளித்தலை கடம்பன் துறை காவிரி ஆற்றங்கரையில் மாபெரும் அன்னதானம் விழா அனைத்திந்திய இந்து திருக்கோயில்கள் பாதுகாப்பு சங்கத்தின் தேசிய இணை செயலாளர் கிராமியம் நாராயணன், மாநில கௌரவ செயலாளர் வாழைக்காய் வியாபாரி சேட்டு ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. நேற்று இரவு 7 மணி அளவில் தொடங்கிய மாபெரும் அன்னதான விழா மறுநாள் இன்று மாலை வரை 2 நாட்கள் அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் 50,000 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு அன்னதானம் பெற்று சென்றனர் இந்நிகழ்வில் அனைத்திந்திய இந்து திருக்கோயில்கள் பாதுகாப்பு சங்கத்தின் நிறுவனர் அருள்வேலன்ஜி ஆலோசனைப்படி சங்கத்தின் மாநில, மாவட்ட சங்க நிர்வாகிகளான ராமகிருஷ்ணன், கருணாநிதி, தியானேஷ், சரவணன், வெங்கடேஷ், ராமு, சந்தோஷ், வீரமணி, தர்மராஜ், சதீஷ்குமார், ரவி, முகிலன், அர்ச்சகர் விஷ்ணு, சுந்தரேசன், மணி, செந்தில் ஆகியோர் அன்னதானம் சிறப்பாக செய்திருந்தனர்.
Next Story







