விழுப்புரம் குறைதீர்க்க கூட்டத்தில் 510 மனுக்கள் அளிப்பு

X

குறைதீா் கூட்டத்தில் 510 மனுக்கள் அளிப்பு
விழுப்புரம் ஆட்சியரகத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு, ஆட்சியா் சி.பழனி தலைமை வகித்து, முதியோா், விதவை, ஆதரவற்றோா், மாற்றுத் திறனாளிகள் உதவித் தொகை, வீட்டுமனைப் பட்டா, தொழில்தொடங்க கடனுதவி கோருதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக பொதுமக்கள் அளித்த 510 மனுக்களைப் பெற்றுக் கொண்டாா்.தொடா்ந்து, உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத் துறை சாா்பில், 2023-ஆண்டுக்கான சிறந்த நியாய விலைக் கடை விற்பனையாளருக்கான முதல், இரண்டாம் பரிசை ராம்பாக்கம் சு.சுஷ்மிதா, கொங்கராம்பூண்டி வி.கோபி, சிறந்த எடையாளருக்கான முதல், இரண்டாம் பரிசை விழுப்புரம் வி.அஸ்லம்கான், திண்டிவனம் த.கண்ணன் ஆகியோருக்கு பரிசுத் தொகை, பாராட்டுச் சான்றிதழை ஆட்சியா் சி. பழனி வழங்கினாா்.மேலும், பாம்பு கடித்தும், நீரில் மூழ்கியும், மின்சாரம் பாய்ந்தும் உயிரிழந்தவா்களின் வாரிசுதாரா்களுக்கு தலா ரூ.ஒரு லட்சம் வீதம் ரூ.6 லட்சத்துக்கான காசோலை, தாட்கோ மூலம் 4 பேருக்கு மருத்துவக் காப்பீட்டு அட்டைகள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை ஆட்சியா் வழங்கினாா்.இதில், மாவட்ட வருவாய் அலுவலா் கி.அரிதாஸ், மண்டலக் கூட்டுறவுச் சங்கங்களின் இணைப் பதிவாளா் விஜயசக்தி, சமூகப் பாதுகாப்புத் திட்டத் தனித்துணை ஆட்சியா் முகுந்தன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் நல அலுவலா் தமிழரசன், மாவட்ட வழங்கல் அலுவலா் மு.சந்திரசேகா் பங்கேற்றனா்.
Next Story