ராசிபுரம் அருகே தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட 54 கிலோ குட்கா பறிமுதல்.விற்பனை செய்த நபர் கைது...

ராசிபுரம் அருகே தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட 54 கிலோ குட்கா பறிமுதல்.விற்பனை செய்த நபர் கைது...
X
ராசிபுரம் அருகே தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட 54 கிலோ குட்கா பறிமுதல்.விற்பனை செய்த நபர் கைது...
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் ஹவுசிங் போர்ட் பகுதியை சேர்ந்த மணி என்பவரது மகன் கதிர்வேல்(52) இவர் ராசிபுரம் LIC அருகே பெட்டிக்கடை வைத்து நடத்தி வருகிறார்.இவரது கடையில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனை செய்தாக ராசிபுரம் காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.தகவலின் பெயரில் ராசிபுரம் காவல் துணை கண்காணிப்பாளர் விஜயகுமார் தலைமையில் காவல் துறையினர் அவரது கடையில் சோதனை செய்தனர்.அப்போது சாக்கு முட்டையில் சுமார் 39 கிலோ ஹான்ஸ்,விமல் பாக்கு 10 கிலோ,கூலிப் 3 என சுமார் 40,000 மதிப்பிலான 54 கிலோ குட்காவை பறிமுதல் செய்து விற்பனையில் ஈடுபட்ட கதிர்வேல் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்...
Next Story