பேரறிஞர் அண்ணாவின் 56-வது நினைவு தினத்தை முன்னிட்டு

பேரறிஞர் அண்ணாவின் 56-வது நினைவு தினத்தை முன்னிட்டு
X
சௌரிராஜ பெருமாள் கோவிலில் சமபந்தி பொது விருந்து
நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் திருக்கண்ணபுரம் சௌரிராஜ பெருமாள் கோவிலில் உள்ள அன்னதான கூடத்தில், பேரறிஞர் அண்ணாவின் 56 -வது நினைவு தினத்தை முன்னிட்டு, சமபந்தி பொது விருந்து நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சியில், இந்து சமய அறநிலையத் துறை ஆய்வாளர் மதி சரவணன் தலைமை வகித்து, பக்தர்களுக்கு சமபந்தி விருந்தை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில், தலைமை கணக்கர் உமா, வசூல் எழுத்தர் ஸ்ரீதர், கணினி தட்டச்சாளர் சரஸ்வதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். விருந்தில், 200-க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்.
Next Story