திண்டுக்கல் ரயில் நிலையத்தில் 5.7 கிலோ கஞ்சா பறிமுதல்
Dindigul King 24x7 |23 Dec 2025 5:06 PM ISTDindigul
திண்டுக்கல் ரயில் நிலையத்திற்கு வந்த கோயம்புத்தூரில் இருந்து நாகர்கோவில் வரை செல்லும் நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரயிலில் இன்று திண்டுக்கல் ரயில்வே காவல் நிலைய ஆய்வாளர் தூயமணி வெள்ளைச்சாமி தலைமையில் சிறப்பு சார்பாக மணிகண்டன் காவலர்கள் ராஜா சந்திரசேகர், சக்திசண்முகம், நாகராஜ், மணிமாறன் ஆகியோர் திடீர் சோதனை மேற்கொண்ட போது முன்பதிவு இல்லா பெட்டியில் இருக்கைக்கு அடியில் கேட்பாரற்றுக் கிடந்த பேக்கை சோதனை செய்த போது அதில் 5.700 கிலோ கிராம் கஞ்சா இருப்பது தெரியவந்தது இதனைத் தொடர்ந்து ரயில்வே போலீசார் கஞ்சாவை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து மேற்படி சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
Next Story


