போச்சம்பள்ளி அருகே சீட்டாட்டம் ஆடிய 6 பேருக்கு காப்பு.

X

போச்சம்பள்ளி அருகே சீட்டாட்டம் ஆடிய 6 பேருக்கு காப்பு.
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி போலீசார் சந்தூர் பகுதியில் சம்பவம் அன்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பணம் வைத்து சீட்டாட்டம் ஆடிக்கொண்டிருந்த திருப்பதி (48) பெருமாள் (49) தீர்த்தமலை (50) பெருமாள் (42) செல்வராஜ் (45) மணிகண்டன் (38) ஆகிய 6 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 3,200 ரூபாய் பணம் பறிமுதல் செய்தனர்.
Next Story