பஸ்ஸில் மூதாட்டியிடம் 6 பவுன் நகைகள் திருட்டு

பஸ்ஸில் மூதாட்டியிடம் 6 பவுன் நகைகள் திருட்டு
X
மார்த்தாண்டம்
குமரி மாவட்டம் மடிச்சல்  பகுதியை  சேர்ந்தவர் மோகன்ராஜ் மனைவி செல்வி (65). இவர் நேற்று குழித்துறையிலிருந்து மார்த்தாண்டம்  நோக்கி அரசு பஸ்ஸில் பயணம் செய்து கொண்டிருந்தார். அப்போது செல்வி தனது கைப்பையில் தங்க நெக்லஸ், வளையல்.கம்மல்கள்,  மோதிரங்கள் என மொத்தம் ஆறு பவுன் தங்க நகைகளை வைத்திருந்தார். அதன் மதிப்பு சுமார் ஒரு லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் என கூறப்படுகிறது.         பயணத்தின் போது சிலர் செல்வி பின்னால் உரசிய படி நின்று கொண்டிருந்தனர். ஆனால் அவர் அதனை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. செல்வி இறங்க வேண்டிய இடம் வந்தவுடன் பஸ்ஸிலிருந்து இறங்கி விட்டார். அப்போது எதார்த்தமாக தனது  கைப்பையை பார்த்தபோது கைப்பையை பார்த்தபோது அதில் இருந்த அனைத்து நகைகளும் மாயமாகி இருந்ததை கண்டு கதறி அழுதார்.       அப்போது பஸ்ஸில் இருந்த போது நகைகளை சிலர் திருடியதை உணர்ந்து கொண்டார். இது குறித்து செல்வி உடனே மார்த்தாண்ட காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து செல்வின் பையில் இருந்த நகைகளை திருடியது பெண்களா?  அல்லது கும்பலாக சேர்ந்து திருடினார்களா?  என விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story