தெரு நாய்கள் கடித்து 6 ஆடுகள், 8 கோழிகள் பலி
Komarapalayam King 24x7 |9 Jan 2026 9:55 PM IST30 ஆடுகள் படுகாயம் குமாரபாளையம் அருகே தெரு நாய்கள் கடித்து 6 ஆடுகள், 8 கோழிகள் பலி 30 ஆடுகள் படுகாயமடைந்தன.
குமாரபாளையம் அருகே சாணார்பாளையத்தில் வசிப்பவர் செல்வராஜ், 40. இவர் ஆடு வளர்க்கும் தொழில் செய்து வருகிறார். இவர் ஆடுகளை பட்டியில் அடைத்து வைப்பது வழக்கம். நேற்றுமுன்தினம் இரவு பட்டியில் அடைத்து வைத்தார். நள்ளிரவில் அப்பகுதியில் உள்ள தெரு நாய்கள் பட்டியில் புகுந்து, ஆடுகளை கடித்து குதறியுள்ளன. இதில் வி.ஏ.ஓ. செந்தில்குமார் கொடுத்த தகவல்படி, ஆடுகள் இறப்பு, 6, கோழிகள் இறப்பு 8, படுகாயமடைந்த ஆடுகள் 30. இதன் மதிப்பு 50 ஆயிரத்துக்கு மேல் இருக்கும் என கூறப்படுகிறது.காயமடைந்த ஆடுகளுக்கு கால்நடை மருத்துவர்கள் சிகிச்சையளித்தனர். இதற்கு காரணம் அப்பகுதியில் உள்ள தெரு நாய்கள் தான் என தெரிகிறது. இதற்கு குப்பாண்டபாளையம் ஊராட்சி நடவடிக்கை எடுத்து,இப்பகுதியில் சுற்றி வரும் தெரு நாய்களை காப்பகம் ஏற்படுத்தி அதில் விட வேண்டும் மேலும் வீட்டில் வளர்க்கும் நாய்களுக்கு ஊராட்சியில் பாஸ் பெற்று இரவில் வெளியே விடாமல் பாதுகாப்பு செய்ய வேண்டும் என இப்பகுதி மக்கள் கூறினார்கள்.
Next Story



