ஜல்லிப்பட்டி பிரிவு அருகே கஞ்சாவை பதுக்கிய சிறுவன் கைது. 60 கிராம் கஞ்சா பறிமுதல்.
Karur King 24x7 |30 Nov 2024 12:10 PM GMT
ஜல்லிப்பட்டி பிரிவு அருகே கஞ்சாவை பதுக்கிய சிறுவன் கைது. 60 கிராம் கஞ்சா பறிமுதல்.
ஜல்லிப்பட்டி பிரிவு அருகே கஞ்சாவை பதுக்கிய சிறுவன் கைது. 60 கிராம் கஞ்சா பறிமுதல். ஜல்லிப்பட்டி பகுதியில் தடை செய்யப்பட்ட கஞ்சாவை பதுக்கி வைத்திருப்பதாக மதுவிலக்கு பிரிவு காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் அறிவழகன் நவம்பர் 29ஆம் தேதி காலை 8 மணி அளவில் ஜல்லிப்பட்டி பிரிவு சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார் அப்போது அவ்வழியாக வந்த ஒரு சிறுவனை இடைமறித்து சோதனை மேற்கொண்ட போது, அந்த சிறுவனிடம் 60 கிராம் கஞ்சா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. உடனே கஞ்சாவை பறிமுதல் செய்த காவல்துறையினர், பின்னர் அந்த சிறுவனிடம் விசாரணை மேற்கொண்டபோது, திண்டுக்கல் மாவட்டம், டி கூடலூர் அருகே உள்ள ஒரு பகுதியைச் சேர்ந்த சரவணன் மகன் என தெரிய வந்தது. உடனே அந்த சிறுவனை கைது செய்து சிறையில் அடைத்தனர். பிறகு அந்த சிறுவனை கரூர் சிறார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்திய பிறகு அச்சிறுவனுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. மேலும், இது தொடர்பாக மதுவிலக்கு பிரிவு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
Next Story