உயர்கல்வி படிக்கும் 60 வாரிசுகளுக்கு கலைஞர் கல்வி உதவி தொகையை வழங்கிய எம்.பி கே.ஆர்.என் ராஜேஷ்குமார்.

உயர்கல்வி படிக்கும் 60 வாரிசுகளுக்கு கலைஞர் கல்வி உதவி தொகையை வழங்கிய எம்.பி கே.ஆர்.என் ராஜேஷ்குமார்.
X
தமிழ்நாடு முதலமைச்சர் M. K. Stalin நல்லாசியுடன் தமிழ்நாடு துணை முதலமைச்சர் Udhayanidhi Stalin வழிகாட்டுதலில் மோகனூர் ஒன்றியம் (44 பேர்) மற்றும் மோகனூர் பேரூர் (16 பேர்) கழகங்களில் கிளை மற்றும் வார்டு கழகத்தில் தற்போது பொறுப்பில் உள்ள அவைத் தலைவர்,
துணை செயலாளர், பொருளாளர் மற்றும் ஒன்றிய/பேரூர் அணியின் அமைப்பாளர் / துணை அமைப்பாளர் / தலைவர் மற்றும் தொடர்ந்து கழகத்தில் இரண்டு உறுப்பினர் அட்டைக்கு குறையாமல் உள்ளவர்களின் குடும்பத்தில் உயர்கல்வி படிக்கும் 60 வாரிசுகளுக்கு கலைஞர் கல்வி உதவி தொகையை நாமக்கல் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் மாநிலங்களவை உறுப்பினர் கேஆர்என்.இராஜேஸ்குமார் வழங்கினார். நிகழ்ச்சியில் ஒன்றிய கழக செயலாளர் பெ.நவலடி, பேரூர் கழக செயலாளர் செல்லவேல்,பேரூராட்சி தலைவர் வனிதா மோகன், துணை தலைவர் சரவணன், சார்பு அணி அமைப்பாளர்கள் பொன்.சித்தார்த், கிருபாகரன் உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Next Story