குஜிலியம்பாறை அருகே சேவல் சண்டை சூதாட்டம் - 60 டூவீலர்கள் ரூ.1லட்சம் பணம் பறிமுதல் 7 பேர் கைது - DSP அதிரடி நடவடிக்கை
Dindigul King 24x7 |28 Dec 2025 8:14 AM ISTதிண்டுக்கல் குஜிலியம்பாறை
திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை பகுதியில் சேவல் சண்டை சூதாட்டம் நடைபெறுவதாக வேடசந்தூர் துணை கண்காணிப்பாளர் பவித்ரா அவர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் சார்பு ஆய்வாளர் மில்டன் மற்றும் துணை கண்காணிப்பாளரின் தனிப்படையினர் நாகராஜ் பாலாஜி பாசித் ரகுமான் பாஸ்கரன் குஜிலியம்பாறை பகுதியில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர் அப்போது திமுகவை சேர்ந்த கவின் என்பவர் சேவல் சண்டை நடத்தி வருவதாக தகவல் கிடைத்துள்ளது குஜிலியம்பாறையை அடுத்த இழுப்பப்பட்டியில் சேவல் சூதாட்டம் நடைபெற்றதை தனிப்படை போலீசார் கண்டுபிடித்தனர் போலீசாரை கண்டதும் சேவல் சூதாட்டத்தில் ஈடுபட்ட நபர்கள் தப்பி ஓடி உள்ளனர் சுற்றி வளைத்த தனிப்படை போலீசார் 7 பேரை கைது செய்து 60 டூவீலர்கள் ரூ.1 லட்சம் பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்து குஜிலியம்பாறை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர் இதுகுறித்து குஜிலியம்பாறை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
Next Story


