துவரங்குறிச்சியில் செல்போன் கடையின் மேற்கூரையை உடைத்து 60,000 பணம் கொள்ளை.

துவரங்குறிச்சியில் செல்போன் கடையின் மேற்கூரையை உடைத்து 60,000 பணம் கொள்ளை.
திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி நத்தம் சாலையில் செல்போன் கடை வைத்திருப்பவர் ஆலம்பட்டியைச் சேர்ந்த செல்வக்குமார் 30 . இவர் வழக்கம் போல் நேற்று கடையை மூடிவிட்டு வீட்டிற்கு சென்று விட்டார். இந்த நிலையில் மீண்டும் இன்று காலையில் வந்து கடையின் பூட்டை திறந்து உள்ளே சென்ற போது கடையின் மேற்கூரை உடைந்து இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். அதனைத் தொடர்ந்து கல்லாவில் வைத்திருந்த சுமார் 60000 பணத்தை மர்ம நபர் கொள்ளை அடித்துச் சென்றது தெரியவந்தது. உடனடியாக துவரங்குறிச்சி காவல் துறையினருக்கு தகவல் அளித்தார். தகவலைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் எதிர் புறம் உள்ள மரக்கடை , டயர் கடை என இரண்டு கடைகளிலும் திருட முயன்றுள்ளனர். சம்பவ இடத்தில் மோப்பநாய் மற்றும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன. மேலும் கடையில் உள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபரை தேடி வருகின்றனர்.
Next Story