ஆர்.டி மலையில் 64 ஆம் ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டி
Kulithalai King 24x7 |14 Jan 2026 6:33 AM ISTமாவட்ட ஆட்சியர், எஸ்பி ஆய்வு
கரூர் மாவட்டம் தோகைமலை அருகே உள்ள ஆர்.டி.மலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கிராம பொதுமக்கள் சார்பில் 64-ஆம் ஆண்டு ஜல்லிக்கட்டு ஜன. 17-ஆம்தேதி நடைபெற உள்ளது. முன்னதாக ஜல்லிக்கட்டு நடத்த மாவட்ட ஆட்சியரிடம் அனுமதிக்கேட்டு கடந்த வாரம் கிராம மக்கள் சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. இந்நிலையில் ஜல்லிக்கட்டு நடத்த மாவட்ட ஆட்சியர் கடந்த 9 ஆம் தேதி அனுமதி அளித்தார். இதையடுத்து ஜல்லிக்கட்டு நடத்த வாடிவாசல் அமைத்தல், ஜல்லிக்கட்டு மாடுகள் வரும் பாதை, மாடு பிடி வீரர்களுக்கான இடம், பார்வையாளர்களுக்கான இடம், வாடி வாசலில் இருந்து காளைகள் அவிழ்த்துவிடும் பகுதி, மாடுகள் ஓடும் பாதை, தடுப்பு வேலிகள், மருத்துவ சேவை, பரிசு வழங்குவோர் இடம், அவசர வழி, வாகனங்கள் நிறுத்தும் இடம் என அனைத்து பகுதிகளையும் முறையாக அமைக்கும் பணியில் விழா குழுவினர்கள் ஈடுபட்டுள்ளனர். இப்பணிகளை மாவட்ட ஆட்சியர் தங்கவேல், மாவட்ட எஸ்பி ஜோஸ் தங்கையா நேற்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது, ஜல்லிக்கட்டு தணிக்கை குழு தலைவர் சொக்கலிங்கம், இணை இயக்குனர் செழியன், கால்நடைத்துறை, வருவாய் துறை, மருத்துவ துறை, தீயணைப்புத்துறை அதிகாரிகள் மற்றும் விழா கமிட்டி நிர்வாகிகளுடன் ஜல்லிக்கட்டு போட்டியில் மேற்கொள்ளப்படும் கட்டுப்பாடுகள், மாடுபிடி வீரர்கள் பாதுகாப்பு, பார்வையிட வரும் பொதுமக்கள் பாதுகாப்பு, காளைகள் பாதுகாப்பு குறித்து பல்வேறு ஆலோசனைகள் மற்றும் அறிவுரைகளை கமிட்டி நிர்வாகிகள் மற்றும் அதிகாரிகளுக்கு வழங்கினார்.
Next Story






