ராசிபுரம் நகராட்சி பகுதியில் ரூ.66 லட்சம் மதிப்பில் மின்விளக்குகள் மாநிலங்களவை உறுப்பினர் கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் எம்பி தொடங்கி வைத்தார்..

ராசிபுரம் நகராட்சி பகுதியில் ரூ.66 லட்சம் மதிப்பில் மின்விளக்குகள் மாநிலங்களவை உறுப்பினர் கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் எம்பி  தொடங்கி வைத்தார்..
X
ராசிபுரம் நகராட்சி பகுதியில் ரூ.66 லட்சம் மதிப்பில் மின்விளக்குகள் மாநிலங்களவை உறுப்பினர் கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் எம்பி தொடங்கி வைத்தார்..
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் நகராட்சி பகுதியில் ரூ.66 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள மின்விளக்குகளின் செயல்பாடுகள் தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. ராசிபுரம் புதிய பேருந்து நிலையம் முன்பாக நடைபெற்ற விழாவில் நகர்மன்றத் தலைவர் முனைவர் திருமதி ஆர்.கவிதா சங்கர் தலைமை வகித்தார். இதில் மாநிலங்களவை உறுப்பினர் கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று நகராட்சியின் சிறப்பு நிதி திட்டத்தின் கீழ் பழைய பேருந்து நிலையம் முதல் கோனேரிப்பட்டி பகுதி வரை அமைக்கப்பட்டுள்ள 66 மின் விளக்குகளின் செயல்பாட்டினை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார். ஏற்கனவே நகரில் பழைய மின் விளக்குள் மாற்றம் செய்யப்பட்டு புதியதாக 2000 ஆயிரத்தும் மேற்பட்டவை எல்இடி மின்விளக்குகளாக மாற்றியமைக்கப்பட்டுள்ளன. இதனையடுத்து தற்போது 66 எல்இடி மின் விளக்குகள் பொருத்தும் பணி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ராசிபுரம் நகர திமுக செயலாளர் என்.ஆர்.சங்கர், நகர்மன்ற உறுப்பினர்கள், மகளிர் அணியினர், தொண்டர்கள், உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
Next Story