நாமக்கல்லில் தியாகராஜ பாகவதர் 66-ஆவது நினைவு தினம் அனுசரிப்பு

நாமக்கல்லில் தியாகராஜ பாகவதர் 66-ஆவது நினைவு தினம் அனுசரிப்பு
X
பாகவதர் நற்பணி மன்ற தலைவர் கோட்டை மணிவண்ணன் மற்றும் நிர்வாகிகள் பொதுமக்கள் தியாகராஜ பாகவதரின் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்கள் ‌
மறைந்த பழம்பெரும் நடிகர் தியாகராஜ பாகவதரின் நினைவு நாள் நிகழ்ச்சி நாமக்கல்லில் நடைபெற்றது. நாமக்கல் தியாகராஜ பாகவதர் நற்பணி சங்கத்தின் சார்பில் பாகவதரின் 66-ஆவது நினைவு நாள் நிகழ்ச்சி நாமக்கல் அண்ணாசிலை அருகில் நடைபெற்றது. இதையொட்டி, பாகவதர் நற்பணி மன்ற தலைவர் கோட்டை மணிவண்ணன், தியாகராஜ பாகவதரின் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். நாமக்கல்லில் தியாகராஜ பாகவதருக்கு மார்பளவு சிலை அமைக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி மற்றும் மாநிலங்களவை உறுப்பினரும், நாமக்கல் கிழக்கு மாவட்ட செயலாளருமான ராஜேஷ்குமார் எம்பி, அமைச்சர் மதிவேந்தன், நாமக்கல் சட்ட மன்ற உறுப்பினர் ராமலிங்கம் எம்எல்ஏ மற்றும் மாநகராட்சி மேயர் கலாநிதி, துணை மேயர் பூபதி ஆகியோருக்கு கோரிக்கை வைக்கப்பட்டது.
தியாகராஜ பாகவதரின் புகழை பரப்பும் வகையில் அவரது பாடல்கள் பாடப்பட்டன. திருச்சியில் தியாகராஜ பாகவதருக்கு மணிமண்டபம் மற்றும் முழு உருவ வெண்கல சிலையயை திறந்து வைத்த தமிழக முதல்வர் அவர்களுக்கு இத்தருணத்தில் எங்களது மன்றத்தின் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கின்றோம்.நிகழ்ச்சியில் குமுதம் நாகராஜன், என்.புதுப்பட்டி நடராஜன், ஸ்டுடியோ ரவி, பூபதி, தியாகராஜன், செல்வம் , வித்வான் பிரபு,மாதேஸ்வரன் , சபரி ,ஜெயராமன், நரசிம்மன் , பிரகாஷ் துரைசாமி,செல்வம், பாஸ்கர் , ரமேஷ், குணசேகரன்,மற்றும் மன்ற நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்
Next Story