ஆரணி கோட்டாட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்வு கூட்டத்தில் 68 மனுக்கள்.

ஆரணி கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறை தீர்வு கூட்டத்தில் பயனாளியிடம் இருந்து மனுவினை பெற்ற ஆரணி கோட்டாட்சியர் சீ.சிவா.
ஆரணி கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறை தீர்வு கூட்டத்தில் கோட்டாட்சியர் சீ.சிவா பொதுமக்கள் 68 பேரிடம் கோரிக்கை மனுக்களை பெற்று அந்தந்த துறை அதிகாரிகளிடம் கொடுத்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். இக்கூட்டத்தில் இலவச வீட்டுமனை பட்டா, கணினி பதிவேற்றம், பட்டா மாற்றம், அனாதீனம் தடைநீக்கம், சான்றுகள், நிலஅளவை, நிலப்பட்டா, பட்டா ரத்து, ஆக்கிரமிப்பு அகற்றம், பரப்பு திருத்தம், கிராம கணக்கு பதிவேற்றம், இலவச வீடு, கழிவு நீர் கால்வாய், மின் இணைப்பு ரத்து உள்ளிட்ட 68 மனுக்களை ஆரணி கோட்டாட்சியர் பெற்று அந்தந்த துறை அதிகாரிகளிடம் கொடுத்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
Next Story