திமுக அரசு கடந்த தேர்தலில் விவசாயிகளுக்கான அறிவித்த 68 வாக்குறுதிகளை தற்போது 2 சதவீதம் கூட நிறைவேற்றவில்லை.

திமுக அரசு கடந்த தேர்தலில் விவசாயிகளுக்கான அறிவித்த 68 வாக்குறுதிகளை தற்போது 2 சதவீதம் கூட நிறைவேற்றவில்லை.
X
ஆரணி அடுத்த மைனந்தல் கிராமத்தில் தமிழ்நாடு தேசிய பசுமைப் புரட்சி புயல் விவசாயிகள் நல சங்கத்தின் கிளை திறப்பு விழா, புதிய உறுப்பினர்கள் சேர்க்கை மற்றும் உறுப்பினர் அடையாள அட்டை வழங்கும் விழா என முப்பெரும் விழா இரவு நடைபெற்றதில் பேசினார் மாநிலதலைவர் விஜயகீர்த்தி.
ஆரணி அடுத்த மைனந்தல் கிராமத்தில் தமிழ்நாடு தேசிய பசுமைப் புரட்சி புயல் விவசாயிகள் நல சங்கத்தின் கிளை திறப்பு விழா, புதிய உறுப்பினர்கள் சேர்க்கை மற்றும் உறுப்பினர் அடையாள அட்டை வழங்கும் விழா என முப்பெரும் விழா இரவு நடைபெற்றதில் திமுக அரசு கடந்த தேர்தலில் விவசாயிகளுக்காக அறிவித்த 68 வாக்குகுறுதிகளில் தற்போது 2 சதவீதம் கூட நிறைவேற்றவில்லை என்று தமிழ்நாடு தேசிய பசுமைப்புரட்சி புயல் விவசாயிகள் நலசங்கத்தின் மாநில தலைவர் விஜயகீர்த்தி பேசினார். இந்த முப்பெரும் விழாவில் ஒன்றிய தலைவர்கள் கோபி, வெங்கடேசன், ஸ்ரீதர் ஆகியோர் தலைமை தாங்கினர். இதில் கலந்துகொண்ட அச்சங்கத்தின் மாநில தலைவர் விஜயகீர்த்தி சங்கத்தின் கொடியை ஏற்றி வைத்து பின்னர் புதிய உறுப்பினர்களுக்கு சால்வை அணிவித்து அடையாள அட்டைகளை வழங்கினார். அதனைத் தொடர்ந்து பேசிய அவர். திமுக அரசு கடந்த சட்டமன்றத் தேர்தலில் அளித்த 526 வாக்குறுதியில் விவசாயிகளுக்கான அறிவித்த 68 வாக்குறுதிகளை இரண்டு சதவீதம் கூட தற்போது வரை நிறைவேற்ற வில்லை. குறிப்பாக நெல் குவிண்டாலுக்கு 1500 உயர்த்தப்படும். கரும்பு டன்னுக்கு 3 ஆயிரத்திலிருந்து 4,500 ஆக வழங்கப்படும் ஆட்சிக்கு வந்தால் முதல் கையெழுத்து கூட்டுறவு வங்கியில் விவசாயிகள் வைத்த விவசாய கடன், நகை கடன்களை உடனடியாக தள்ளுபடி செய்வேன் என்று கூறி தற்போது வரை செய்யவில்லை. கிராமப்புற சிறு விவசாயிகளுக்கு மானியத்தில் டிராக்டர் மற்றும் விவசாய இடுபொருட்கள் வழங்குவதாக கூறி அந்த திட்டத்தை தற்போது வரை முழுமையாக நிறைவேற்றப்படவில்லை. கல்விக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்ற வாக்குறுதி அதனையும் நிறைவேற்றவில்லை. 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில் மத்திய அரசு வழங்குகின்ற ரூபாய் 336ல் ரூபாய் 100 மட்டுமே மாநில அரசு வழங்குகின்றன மீதமுள்ள தொகை அதிகாரிகள் ஊழல் செய்து வருகின்றனர், 100 நாள் பணியில் 50 முதல் 60 நாள் வரை பணி வழங்கிவிட்டு அதிகாரிகள் முறைகேடில் ஈடுபடுகின்றனர்.. இந்த திமுக அரசு விவசாயிகளுக்காக போராடிய விவசாய சங்க மாநில தலைவரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்தது இது நாள் வரை எத்தனையோ முதலமைச்சர்கள் இருந்துள்ளனர் ஆனால் இது போன்ற நடவடிக்கை யாரும் ஈடுபடவில்லை. இதனால் விவசாயிகள் இனிவரும் தேர்தலில் விவசாயிகளுக்கான முதல்வர் யார் என்று தேர்ந்தெடுத்து அவருக்கு வாக்களியுங்கள் மீண்டும் ஏமாறாதீர்கள் என்று தெரிவித்தார்.. இதில் விவசாய சங்க நிர்வாகி மட்டதாரி பிரேம், மாநில ஆலோசகர் அரிகிருஷ்ணன், மாநிலபொருளாளர் ரவி, கிளை பொறுப்பாளர்கள் தரணிபாலன், குருமூர்த்தி, சௌந்தர்,மூர்த்தி கேசவன், மணிமாறன், பாபு, மணிகண்டன், ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.
Next Story