ராசிபுரம் அருகே இயற்கையை காப்போம் மரங்களை வளர்ப்போம் எனும் தலைப்பில் மாரத்தான் போட்டி. 700.க்கும் மேற்பட்ட மாணவ,மாணவிகள் பங்கேற்பு...

X
Rasipuram King 24x7 |4 Jan 2026 7:50 PM ISTராசிபுரம் அருகே இயற்கையை காப்போம் மரங்களை வளர்ப்போம் எனும் தலைப்பில் மாரத்தான் போட்டி. 700.க்கும் மேற்பட்ட மாணவ,மாணவிகள் பங்கேற்பு... ட
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த காக்காவேரி பகுதியில் உள்ள முத்தாயம்மாள் தனியார் பாலிடெக்னிக் கல்லூரி சார்பில் இயற்கையை காப்போம் மரங்களை வளர்ப்போம் எனும் தலைப்பில் உடல் ஆரோக்கியத்தை வலியுறுத்தியும், உடற்பயிற்சி முக்கியத்துவத்தை குறித்தும் மாரத்தான் போட்டியானது நடைபெற்றது. முத்தாயம்மாள் கல்வி நிறுவனத்தின் சார்பாக முத்தாயம்மாள் மெமோரியல் மாரத்தான் Edition-3 முத்தாயம்மாள் பாலிடெக்னிக் கல்லூரியில் தொடங்கியது. போட்டியை சுகம் தனியார் மருத்துவமனை மருத்துவர் சுகவனம், தாளாளர் பிரேம்குமார் , மற்றும் நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டு போட்டியை கொடியசைத்து துவக்கி வைத்தனர். போட்டியானது 10 கிலோமீட்டர், 5 கிலோ மீட்டர் என ஆண்கள்,பெண்கள் என 2 பிரிவுகளின் கீழ் போட்டியானது நடைபெற்ற நிலையில் இதில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 700.க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு ஓடினர்.போட்டியானது கல்லூரி வளாகத்தில் இருந்து தொடங்கி ஜே,ஜே நகர்,சேந்தமங்கலம் பிரிவு சாலை, அப்பநாயக்கன்பட்டி உள்ளிட்ட வழியாக சென்று இறுதியாக கல்லூரி வளாகத்தை சென்றடைந்தனர். போட்டியில் 2 பிரிவுகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற முதல் 3 நபர்களுக்கு ரொக்கப் தொகையும், பாராட்டு சான்றிதழ்களும், வழங்கப்பட்டது.. இந்த நிகழ்ச்சிகள் கல்லூரி முதல்வர்கள் ஜி. விஜயகுமார்,ஏ. சோமு, மற்றும் கல்லூரி ஆசிரியர்கள் அலுவலர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
Next Story
