நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுகவில் மறைந்த 71 நிர்வாகிகளுக்கு கலைஞர் குடும்ப நல நிதி! கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் எம்பி வழங்கினார்.

X
Namakkal King 24x7 |21 Oct 2025 9:07 PM ISTநாமக்கல் கிழக்கு ,மேற்கு ,தெற்கு நகர பகுதிகளில் உள்ள திமுக நிர்வாகிகளின் குடும்ப உறுப்பினர்கள் 71 மறைந்தவர்களின் குடும்பத்திற்கு கலைஞர் குடும்பநல நிதியை கே.ஆர்.என். ராஜேஸ்குமார் எம்.பி வழங்கினார்.
நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக கழக உறுப்பினர்களின் தலைவர் கலைஞர் குடும்ப நலநிதி வழங்கும் நிகழ்ச்சி நாமக்கல்- மோகனூர் சாலையில் உள்ள மாவட்ட திமுக அலுவலகம் கலைஞர் அறிவாலயம் பேராசிரியர் கூட்டரங்கில் நடைபெற்றது.நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் மாநிலங்களவை உறுப்பினரும் நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவருமான கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் எம்பி தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் மாவட்ட திமுக அவைத்தலைவர் மணிமாறன், நாமக்கல் தெற்கு நகர செயலாளர் ராணா ஆனந்த், நாமக்கல் மாநகராட்சி மேயர் கலாநிதி,துணை மேயர் நாமக்கல் கிழக்கு நகர செயலாளருமான பூபதி, மேற்கு நகர செயலாளர் சிவக்குமார் ,மாநில மகளிர் தொண்டர் அணி செயலாளர் ராணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.கூட்டத்தில் நாமக்கல் கிழக்கு மேற்கு தெற்கு நகர பகுதிகளில் உள்ள திமுக நிர்வாகிகளின் குடும்ப உறுப்பினர்கள் 71 மறைந்தவர்களின் குடும்பத்திற்கு தலைவர் கலைஞர் குடும்பநல நிதியை கே .ஆர்.என். ராஜேஸ்குமார் எம்.பி வழங்கினார். முன்னதாக மறைந்த கழக நிர்வாகிகள் புகைப்படங்களுக்கு மலரஞ்சலி செலுத்தி ஒரு நிமிடம் மெளன அஞ்சலி செலுத்தினர்.இந்நிகழ்ச்சியில் நகர திமுக நிர்வாகிகள், வார்டு செயலாளர்கள், நகர் மன்ற உறுப்பினர்கள், சார்பு அணி நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Next Story
