தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 72 வது பிறந்த நாளையொட்டி, பள்ளி,கல்லூரி மாணவ - மாணவர்களுக்கான குழு விளையாட்டு போட்டிகளை கரூரில் செந்தில் பாலாஜி தொடங்கி வைத்தார்.
Karur King 24x7 |10 Jan 2026 5:57 PM ISTதமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 72 வது பிறந்த நாளையொட்டி, பள்ளி,கல்லூரி மாணவ - மாணவர்களுக்கான குழு விளையாட்டு போட்டிகளை கரூரில் செந்தில் பாலாஜி தொடங்கி வைத்தார்..
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 72 வது பிறந்த நாளையொட்டி, பள்ளி,கல்லூரி மாணவ - மாணவர்களுக்கான குழு விளையாட்டு போட்டிகளை கரூரில் செந்தில் பாலாஜி தொடங்கி வைத்தார். கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட திருவள்ளுவர் விளையாட்டு மைதானத்தில், தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் 72வது பிறந்தநாளை முன்னிட்டு பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான குழு விளையாட்டு போட்டிகள் நடைபெற்று வருகிறது. மாணவிகளுக்கு நடைபெற்ற விளையாட்டு போட்டிகளை மாவட்ட திமுக செயலாளரும் ,முன்னா முன்னாள் அமைச்சருமான செந்தில் பாலாஜி இன்று தொடங்கி வைத்தார். கரூர் மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளில் பயிலும் சுமார் 1500 மாணவிகள் பங்கேற்ற இந்த போட்டியில், கோ-கோ, கைப்பந்து, எறிபந்து, கபடி, கூடைப்பந்து உள்ளிட்ட குழு போட்டிகள் நடைபெற்றன. ஒவ்வொரு போட்டிகளிலும் முதல் பந்தை அடித்து போட்டிகளை செந்தில் பாலாஜி துவக்கி வைத்தார் இதேபோல் மாணவர்களுக்கான போட்டிகள் மாலை ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது இதில் வெற்றி பெறும் மாணவ- மாணவிகளுக்கு ரூ 3 லட்சத்து 85 ஆயிரத்து 600 மதிப்பிலான சுழற்கோப்பை மற்றும் ரொக்கப்பரிசுகள் வழங்கப்பட உள்ளன. நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர்கள் மாணிக்கம், இளங்கோ, சிவகாமசுந்தரி , மாநகர செயலாளர் கனகராஜ், துணை மேயர் தாரணி சரவணன், பகுதி கழகச் செயலாளர்கள் குமார் , ஜோதிபாசு, பாண்டியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்...
Next Story






