வெம்பாக்கம் கிழக்கு ஒன்றியம் அதிமுக சார்பில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 76 வது பிறந்தநாள் விழா

வெம்பாக்கம் கிழக்கு ஒன்றியம் அதிமுக சார்பில் மறைந்த முன்னாள் முதலமைச்சர்  ஜெயலலிதாவின் 76 வது பிறந்தநாள் விழா

ஜெயலலிதாவின் 76 வது பிறந்தநாள் விழா

வெம்பாக்கம் கிழக்கு ஒன்றியம் அதிமுக சார்பில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 76 வது பிறந்தநாள் விழா அப்துல்லாபுரம் கிராமத்தில் நடைபெற்றது
செய்யாறு அடுத்த வெம்பாக்கம் கிழக்கு ஒன்றியம் அதிமுக சார்பில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் புரட்சித்தலைவி ஜெயலலிதாவின் 76 வது பிறந்தநாள் விழா கொண்டாட்டம் ஏழை எளிய மக்களுக்கு அன்னதானம் வழங்கி நலத்திட்ட உதவி. திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு வெம்பாக்கம் கிழக்கு ஒன்றியம் அதிமுக சார்பில் ஒன்றிய செயலாளர் எஸ்.திருமூலன் தலைமையில் அப்துல்லாபுரம் கிராமங்களில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் புரட்சித்தலைவி ஜெயலலிதாவின் 76 வது பிறந்தநாள் விழா முன்னிட்டு ஜெயலலிதாவின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கி நல திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக திருவண்ணாமலை வடக்கு மாவட்ட கழக செயலாளர் தூசி கே.மோகன் கலந்துகொண்டு அலங்கரித்து வைக்கப்பட்ட மறைந்த முன்னாள் முதலமைச்சர் புரட்சித்தலைவி ஜெயலலிதாவின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினர். இதைத்தொடர்ந்து 100க்கும் மேற்பட்ட ஏழை எளிய மக்களுக்கு வேட்டி சேலை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் அதிமுக மாவட்ட துணை செயலாளர் டி பி.துரை, மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுனர் அணிசெயலாளர் ரகு,வெற்றிச்செல்வன் , கன்னியப்பன், ஒன்றிய கவுன்சிலர் ராஜ்கணேஷ்,அசோக் குமார், நமண்டி அசோக், சுதர்சன், காசி, ஜெகன் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Read MoreRead Less
Next Story