பட்டணம் பேரூராட்சியில் 77வது குடியரசு தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது..

X
Rasipuram King 24x7 |26 Jan 2026 8:57 PM ISTபட்டணம் பேரூராட்சியில் 77வது குடியரசு தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது..
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த பட்டணம் பேரூராட்சியில் 77 ஆவது குடியரசு தின விழாவை முன்னிட்டு பேரூராட்சி அலுவலகம் முழுவதும் வண்ண விளக்குகள் மற்றும் தோரணங்களால் அலங்கரிக்கப்பட்டு குடியரசு தின விழா சிறப்பாக கொண்டாட ஏற்பாடு செய்தனர். அதன்படி இன்று (26.1.26) திங்கட்கிழமை 77வது குடியரசு தின விழாவை முன்னிட்டு பேரூராட்சி தலைவர் போதம்மாள், துணைத் தலைவர் பொன்.நல்லதம்பி, செயல் அலுவலர் சரவணன், ஆகியோர் தேசிய கொடியை ஏற்றி வைத்து வீரவணக்கம் செலுத்தினர். தொடர்ந்து பேரூராட்சி தூய்மை பணியாளர்கள், மற்றும் அலுவலர்கள், பொதுமக்கள் என அனைவருக்கும் இனிப்புகள் வழங்கினர். இதில் இளநிலை உதவியாளர் கார்த்திக், மற்றும் பலர் கலந்து கொண்டனர்..
Next Story
