கோவை: 78 வயது மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்தவர் கைது !

கோவை: 78 வயது மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்தவர் கைது !
X
கோவை அடுத்த பேரூர் பகுதியில் 78 வயது மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்த பாலன் என்ற பாலமுருகன் (41) கைது செய்யப்பட்டார்
கோவை அடுத்த பேரூர் பகுதியில் 78 வயது மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்த பாலன் என்ற பாலமுருகன் (41) கைது செய்யப்பட்டார். மூதாட்டி வீட்டில் தனியாக வசித்து வருகிறார். இவரது வீட்டருகே வசிப்பவர் பாலமுருகன். கூலித் தொழிலாளியான இவர், மூதாட்டிக்கு அவ்வப்போது சிறு உதவிகள் செய்து வந்துள்ளார். சம்பவத்தன்று, மூதாட்டியின் வீட்டில் பல்பு பழுதானதால், பாலமுருகனை அழைத்து பல்பை மாற்றித் தருமாறு கேட்டுள்ளார். பல்பை மாற்றிய பின், மூதாட்டியின் கைகளை கயிற்றால் கட்டி, அவரை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். வெளியே சொன்னால் கொலை செய்துவிடுவதாக மிரட்டியுள்ளார்.பயந்துபோன மூதாட்டி யாரிடமும் சொல்லவில்லை. ஆனால், பாலமுருகன் தொடர்ந்து மூதாட்டிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதனால் பயந்துபோன மூதாட்டி, இரவில் தனது வீட்டில் படுக்காமல் அருகே உள்ள கோயிலுக்கு சென்று படுத்துக் கொண்டார். இதுகுறித்து சிலர் விசாரித்தபோது, மூதாட்டி நடந்த சம்பவத்தை அழுதுகொண்டே கூறியுள்ளார். இதுகுறித்து மூதாட்டியால் பேரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில் காவல்துறையினர் பாலமுருகனை நேற்று கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Next Story