நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்தம் மற்றும் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்கள் உள்ளிட்ட 80 பேரை போலீசார் கைது செய்தனர்.

பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தொழிலாளர்கள் சங்கம் CITU சார்பில் தமிழ்நாடு முழுவதும் வேலை நிறுத்தம் மற்றும் மறியல் போராட்டம்(8.12.2025) நடைபெற்றது.

அதன்படி, நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு CITU மாவட்ட செயலாளர் நா. வேலுசாமி தலைமை வகிக்க, வேலை நிறுத்தம், மறியல் போராட்டம், மாவட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியர் சங்கம் CITU சார்பில் நடைபெற்றது.இதில் கலந்துகொண்ட தொழிலாளர்கள், தமிழக அரசு கிராம ஊராட்சிகளில் பணிபுரியும் உள்ளாட்சி ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், குறைந்தபட்ச ஊதியம் வழங்க வேண்டும், மாநில அரசு அறிவித்த கொரோனா ஊக்கத்தொகை ரூபாய் 15,000 வழங்கிட வேண்டும் என கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி பணிபுரியும் தொழிலாளர்கள், சுகாதார பணியாளர்கள் ஆகியோருக்கு நிர்ணயித்த ஊதியம் வழங்க வேண்டும்., பணியாளர்களுக்கு குடியிருப்பு வீடு வழங்க வேண்டும்., பணியாளர்களுக்கு பிடித்தம் செய்யும் காப்பீட்டு தொகைக்கு உரிய ரசீது வழங்க வேண்டும்., அதற்கான மருத்துவமனைகளில் பட்டியலை வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.மேலும், இந்த போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து, தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். அதனைத் தொடர்ந்து ஆட்சியர் அலுவலகம் அருகே திருச்செங்கோடு சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் அவர்கள் ஈடுபட முயன்றனர்.அப்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல் துறையினர், சாலை மறியலில் ஈடுபட முயன்ற 80 பேரை கைது செய்து வாகனத்தில் கொண்டு சென்று தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர்.இந்த வேலை நிறுத்தம் மறியல் போராட்டத்தில் CITU நாமக்கல் மாவட்ட நிர்வாகிகள் S. சுரேஷ், S. மலர்கொடி, L. ஜெயக்கொடி, சங்க உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Next Story