மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.85.36 கோடி கடனுதவி

மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.85.36 கோடி கடனுதவி
X
தூத்துக்குடியில் 1020 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.85.36 கோடி கடனுதவி
தூத்துக்குடியில் 1020 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.85.36 கோடி கடனுதவி தூத்துக்குடி: தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள் இன்று (16.09.2025) சேலம் கருப்பூர் அரசு பொறியியல் கல்லூரி வளாகத்தில் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் கீழ் செயல்படும் தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் சார்பாக மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு வங்கி கடனுதவி மற்றும் அடையாள அட்டை வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து, தூத்துக்குடி மாநகராட்சி மாநாட்டு மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் திரு. அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் அவர்கள், மொத்தம் 1020 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.85.365 கோடி மதிப்பிலான வங்கி கடனுதவியையும், குழு உறுப்பினர்களுக்கு அடையாள அட்டைகளையும் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் தூத்துக்குடி மேயர் திரு. பெ. ஜெகன், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் திரு. எம்.சி. சண்முகையா, மாநகராட்சி ஆணையாளர் திருமதி சி. பிரியங்கா (இ.ஆ.ப.), கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) செல்வி ஆர். ஐஸ்வர்யா (இ.ஆ.ப.), தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் இணை இயக்குநர்/திட்ட இயக்குநர் திரு. உ. நாகராஜன், மாநகராட்சி துணை மேயர் திருமதி செ. ஜெனிட்டா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Next Story