வேலை வாய்ப்பு முகாமில் 9 மாணவர்களுக்கு பணி ஆணை

X
காஞ்சிபுரம் அடுத்த, ஏனாத்துாரில் உள்ள சங்கரா கலை மற்றும் அறிவியல் கல்லுரியில் மாணவர்களின் திறன் மேம்பாட்டிற்கும் வேலை வாய்ப்புகளை உறுதி செய்வதற்கும் பயிற்சி மற்றும் பல்வேறு முன்னணி நிறுவனம் சார்பில் வேலை வாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக சிட்டி யூனியன் வங்கி மற்றும் 'ராசன்ஸ்' நிறுவனம் சார்பில், சங்கரா கல்லுாரியில் வேலை வாய்ப்பு முகாம் நடத்தப்பட்டது. இதில், தேர்வு செய்யப்பட்ட ஒன்பது மாணவர்களுக்கு சங்கரா கல்லுாரி முதல்வர் முனைவர் கலைராம வெங்கடேசன் பணி நியமன ஆணையை வழங்கி, பாராட்டினார்.
Next Story

