பெண்ணிடம் 9 பவுன் நகை பறிப்பு பைக்கில் வந்த மர்ம நபர்கள் அட்டூழியம்

பெண்ணிடம் 9 பவுன் நகை பறிப்பு பைக்கில் வந்த மர்ம நபர்கள் அட்டூழியம்
X
குற்றச் செய்திகள்
திருமயம்: நமணசமுத்திரம் போலீஸ் ஸ்டேஷன் அருகே பேக்கரி நடத்தி வருபவர் குமார். இவரது மனைவி பாக்கியலட்சுமி(45). நேற்று புதுக்கோட்டை சென்று விட்டு மொபட்டில் வீட்டுக்கு சென்றுக் கொண்டிருந்தார் போலீஸ் ஸ்டேஷன் அருகே வந் தபோது, அவரை பின்தொடர்ந்து பைக்கில் வந்த மர்ம நபர்கள் மொபட்டை வழிமறித்தனர். இதில் நிலைதடுமாறி பாக்கியலட்சுமி கீழே விழுந்ததும், அவர் அணிந்திருந்த 9 பவுன் செயினை பறித்துக் கொண்டு தப்பிவிட்டனர். இதன் மதிப்பு ரூ.7 லட்ச மாகும்.. இதுகுறித்து நமுணசமுத்திரம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். வழிப்பறியில் ஈடுபட்ட மர்ம நபர்களின் அடையா ளம் மற்றும் பைக் விபரத்தை அரிமளம்,திருமயம், பனையப்பட்டி, பொன்னமராவதி போலீஸ் ஸ்டேஷன் களுக்கு தெரிவித்து வாகன சோதனை நடத்தி குற்ற வாளிகளை உடனடியாக பிடிக்க நடவடிக்கை எடுக் குமாறு எஸ்பி அபிஷேக் குப்தா உத்தரவிட்டுள்ளார்.
Next Story