காங்கேயத்தில் 9 செம்மறி ஆடுகளை கடித்த வெறி நாய்கள் - இறந்த ஆடுகளை வைத்து போராட்டம் - இழப்பீடு வழங்கவில்லை போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவிப்பு

காங்கேயத்தில் 9 செம்மறி ஆடுகளை கடித்த வெறி நாய்கள் - இறந்த ஆடுகளை வைத்து போராட்டம் - இழப்பீடு வழங்கவில்லை போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவிப்பு
X
காங்கேயம் பொரையாக்கவுண்டன் வலசில் பிரகாஷ் என்ற விவசாயிக்கு சொந்தமான ஆட்டுப்பட்டியில்  புகுந்த வெறி நாய்கள் கடித்துக் 9 செம்மறி ஆடுகள் பலி. மேலும் சில ஆடுகள் படுகாயம். இழப்பீடு வழங்கும் வரை இறந்த ஆடுகளை வைத்து போராட்டம். விவசாய சங்கங்களுடன் ஆலோசனை செய்து போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவிப்பு
காங்கேயம் அடுத்துள்ள பரஞ்சேரி வழி ஊராட்சிக்குட்பட்ட பொறையாகவுண்டன் வலசு என்ற பகுதி உள்ளது. இந்த பகுதியில் பிரகாஷ் (40) குடும்பத்துடன் குடியிருந்து கொண்டு விவசாயம் செய்து வருகின்றார். இந்த பகுதியில் விவசாயம் பொய்த்து போனதால் ஆடு, மாடு போன்ற கால்நடைகளை வைத்து விவசாயிகள் வருமானம் ஈட்டி வருகின்றனர். அந்த வகையில் விவசாயி பிரகாசம் சுமார் 60க்கும் மேற்பட்ட ஆடுகளை வளர்த்து வருமானம் ஈட்டி வருகிறார். இந்த நிலையில் கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக காங்கேயம் சுற்றுவட்டார பகுதிகளில் வெறிநாய்களின் தொல்லையால் பல்லாயிரக்கணக்கான ஆடுகள் கடித்து இறந்து வருகின்றது. அந்த வகையில் நேற்று நள்ளிரவில் பிரகாஷின் தோட்டத்திற்குள் புகுந்த வெறி நாய்கள் தொண்டுபட்டியில் அடைத்து வைத்திருந்த ஆட்டுப்பட்டிக்குள் நுழைந்து 15க்கும் மேற்பட்ட ஆடுகளை கடித்து குதறி உள்ளது. வழக்கம் போல் பிரகாஷ் காலையில் ஆடுகளை தொண்டு பட்டியலில் இருந்து திறந்து விட வந்து பார்த்தபோது ஆடுகள் ஏகதேசம் தோட்டத்திற்குள் இறந்து கிடந்துள்ளது பின்னர் வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறையிடம் தெரிவித்துள்ளார். சம்பவ இடத்திற்கு வந்த வருவாய் துறை அதிகாரிகள் 9 ஆடுகள் இறந்து விட்டதாகவும் மேலும் 6க்கும் மேற்பட்ட ஆடுகள் படுகாயமடைந்துள்ளதாக உறுதிசெய்தனர்.  இறந்த ஆடுகளின் மதிப்பு சுமார் 1 லட்சம் இருக்கும் என விவசாயிகள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர். மேலும் தற்போது தமிழக அரசு இறந்த ஆடுகளுக்கு இழப்பீடு வழங்குவதில்லை எனக்கூறி இறந்த ஆடுகளை பிரேத பரிசோதனை செய்வதற்கு கால்நடை மருத்துவர்களை அனுமதிக்கவில்லை. மேலும் இறந்த ஆடுகளுக்கு உரிய இழப்பீட்டை தமிழக அரசு வழங்க வேண்டும் வழங்கும் வறை இறந்த ஆடுகளை தோட்டத்தில் வைத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார். போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயி பிரகாசுக்கு ஆதரவாக பல்வேறு விவசாய சங்கங்கள் ஒன்றிணைந்துள்ளனர்.  தமிழக அரசு மாவட்ட நிர்வாகம் உடனடியாக ஒரு நல்ல முடிவை தெரிவிக்க வேண்டும் என்கின்றனர். அப்படி இல்லையெனில் செய்தித்துறை அமைச்சர் அலுவலகத்தையோ அல்லது மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு இறந்த ஆடுகளுடன் போராட்டத்தில் ஈடுபடும் போவதாகவும் எச்சரிக்கை விடுத்துள்ளனர் ஆடுகள் இறந்தால் இழப்பீடு வழங்குவதாக அறிவித்த தமிழக அரசு இதுவரை சுமார் ரூபாய் 80 லட்சம் வழங்கி இருக்க வேண்டும் அனால் தற்போது வரை 14 லட்சம்  மட்டுமே வழங்கப்பட்டு உள்ளதாக குற்றம் சாட்டுகின்றனர். இறந்து  துர்நாற்றம் வீசி வரும் ஆடுகளின் சடலத்துடன் தோட்டத்தில் போராட்டத்தில் 50க்கும் மேற்பட்ட விவசாயிகளுடன்  ஆடுகளை இழந்த விவசாயிக்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் காங்கேயம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Next Story