சேலம் அம்மாபேட்டை 9வது வார்டில் 73.22 கோடியில் அறிவியல் பூங்கா

X

மாநகராட்சி சார்பில் அமைக்கப்படுகிறது
சேலம் அம்மாபேட்டை 9வதுவார்டில் 3.22 கோடியில் அறிவியல் பூங்கா அமைக்கும் பணி தொடங்கியது. சேலம் அம்மாபேட்டை பணிகள் தொடங்கியது 9 வது வார்டு பகுதியில் 73.22 கோடியில் அறிவியல் பூங்கா அமைக்கப்படுகிறது. இப்பூங்காவில், அறிவியல் தொழில் நுட்பத்துடன் கூடிய தகவல் பலகைகள், ராக்கெட் மாதிரிகள், விண்வெளியில் ஏற்படும் சந்திர,சூரிய கிரகணங்கள் போன்ற நிகழ்வை பொது மக்கள் கண்டு களிக்கும் வகையில் கோளரங்கம் அமைக்கப்படுகிறது. மேலும், கணித பூங்கா, குழந்தைகள் விளையாடும் வகையில் உபகரணங்களுடன் பூங்கா, சூரிய சக்தி மூலம் செயல்படும் வானொலி சாதனம், ஒளி அலைகளின் இயக்க முறைகள் அமைக்கப்படுகிறது. முதியவர்கள் நடைபயிற்சி தளம், விளையாட்டு உபகரணங்கள் அமைக்கப்படுகிறது. இதற்கான ஒப்பந்தம் விடப்பட்டுள்ளது. பூங்கா அமைக்கும் பணி தொடங்குகிறது. இதுகுறித்து அதிகாரிகள் கூறும்போது, சேலம் மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் பள்ளப்பட்டியில் 5.80 கோடியில் அறிவியல் பூங்கா அமைக்கப்பட்டு பயன் பாட்டுக்கு கொண்வரப்பட்டுள்ளது. இதைதொடர்ந்து தமிழக அரசின் சிறப்பு நிதியில் 3.22 கோடியில் 1.70 லட்சம் சதுர அடியில் 2வது அறிவியல் பூங்கா 9வதுவார்டு பகுதியில் அமைக்கப்படுகிறது என்றனர்.
Next Story