பல்லடம் அருகே விபத்து சாலையில் வேன் கவிழ்ந்து 90 ஆயிரம் முட்டைகள் வீண்
Tiruppur King 24x7 |10 Jan 2025 1:13 PM GMT
பல்லடம் அருகே முட்டை ஏற்றி வந்த வேன் கலந்து விபத்துக்குள்ளானதில் 90 ஆயிரம் முட்டைகள் உடைந்து வீணானது. இந்த விபத்து குறித்து பல்லடம் காவல்துறை விசாரணை.
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் இருந்து கோவைக்கு 90 ஆயிரம் முட்டை ஏற்றுக்கொண்டு வேனொன்று கோவை நோக்கி வந்தது. இந்த வேனை நாமக்கல் சேர்ந்த நந்தகுமார் (வயது 40) என்பவர் ஓட்டி வந்தார். அவருடன் கந்தசாமி என்பவரும் வந்தார். இந்த வேன் திருச்சி கோவை மெயின் ரோட்டில் பல்லடம் அருகே உள்ள காளி வேலம்பட்டி பிரிவில் திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து அங்கும், இங்குமாக சென்று ரோட்டில் கவிழ்ந்தது. இதில் வேனில் இருந்த அனைத்து முட்டைகளும் ரோட்டில் உடைந்தது. இதனால் வெள்ளை மஞ்சள் கரு சாலையில் ஆறாக பெருக்கெடுத்து ஓடியது. தகவல் அறிந்த பல்லடம் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கிரேன் மூலம் வேனை அப்புறப்படுத்தினர். இந்த விபத்தில் காயமடைந்த நந்தகுமார் மற்றும் கந்தசாமி ஆகியோருக்கு பல்லடம் அரசு மருத்துவமனை சிகிச்சை அளிக்கப்பட்டது. மேலும் வாகன ஓட்டிகள் சறுக்கி விபத்து ஏற்படாமல் இருக்க மண் கொண்டு வந்து கொட்டப்பட்டது. இந்த விபத்து குறித்து காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story