ராமநாதபுரம் கலையரங்கம் கட்டுவதற்கு சட்டமன்ற உறுப்பினர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் ரூ 9.00 லட்சம் ஒதுக்கீடு செய்து பூமி பூஜை நடைபெற்றது

தெற்கு காட்டூர் கிராமத்திற்கு கலையரங்கம் கட்டுவதற்கு சட்டமன்ற உறுப்பினர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் ரூ 9.00 லட்சம் ஒதுக்கீடு செய்து பூமி பூஜையுடன் பணி துவங்கியது- பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஒன்றியம் வாலாந்தரவை ஊராட்சி தெற்கு காட்டூர் கிராம பொதுமக்கள் ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கத்திடம் தங்களது கிராமத்திற்கு கலையரங்கம் கட்டித்தர வேண்டும் என நீண்டகால கோரிக்கை விடுத்து வந்தனர் அதனை தொடர்ந்து பரிசீலனை செய்த ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் சட்டமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து ரூபாய் 9 லட்சம் கலையரங்கம் கட்டுவதற்கு ஒதுக்கீடு செய்து கொடுத்தார் அப்பகுதி பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர் இந்நிலையில் தெற்கு காட்டூர் கிராமத்திற்கு உட்பட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயம் முன்பு கலையரங்கம் கட்டுவதற்கு இடம் தேர்வு செய்யப்பட்டது நேற்று பூமி பூஜை நடைபெற்றது, இதில் தெற்கு காட்டூர் பகுதியைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு பூமி பூஜை விழாவை சிறப்பித்தனர் வாலாந்தரவை வழுதூர் உள்ளிட்ட பல்வேறு கிராம பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் பங்கேற்றனர். ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் ரூ 9 லட்சம் ஒதுக்கீடு செய்தமைக்கும் பணிகள் நடைபெறுவதற்கு ஆக்கமும் ஊக்கமும் அளித்து வரும் சட்டமன்ற உறுப்பினருக்கு கிராம பொதுமக்கள் மற்றும் திமுகவினர் நன்றி தெரிவித்துக் கொண்டனர், அடிக்கல் நாட்டு விழாவிற்கு வந்த அனைவருக்கும் திமுக பிரமுகர் ஏடிதுரை நன்றி தெரிவித்தார்
Next Story