நாமக்கல்லில் ரூ. 9.15 கோடி மதிப்பில் தோழி மகளிர் விடுதி முதல்வர் அடிக்கல் நாட்டினார். நேரில் சென்று பார்வையிட்ட எம்.பி மற்றும் அமைச்சர்.
NAMAKKAL KING 24X7 B |13 Nov 2025 7:21 PM ISTநாமக்கல் நகரில் ரூ. 9.15 கோடி மதிப்பில் பணிபுரியும் பெண்களுக்கான தோழி மகளிர் விடுதி கட்டிடத்திற்கு, சென்னையில் இருந்து, வீடியோ கான்பரன்ஸ் மூலம் தமிழக முதல்வர் அடிக்கல் நாட்டி வைத்தார்.
சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் சார்பில், ரூ. 9.15 கோடி மதிப்பீட்டில், பணிபுரியும் பெண்கள் தங்குவதற்காக தோழி மகளிர் விடுதி கட்டுமானப்பணிகளுக்கு, தமிழக முதல்வர் சென்னையில் இருந்து வீடியோ கான்பரன்ஸ் மூலம் அடிக்கல் நாட்டி வைத்தார்.தொடர்ந்து நாமக்கல் திருச்சி ரோட்டில் உள்ள பழைய கால்நடை மருத்துவக்கல்லூரி வளாகத்தில், தோழி மகளிர் விடுதி கட்டப்பட உள்ள இடத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, மாவட்ட ஆட்சியர் துர்கா மூர்த்தி தலைமை வகித்தார். ராஜ்யசபா எம்.பி., ராஜேஷ்குமார், எம்எல்ஏ ராமலிங்கம், மாநகராட்சி மேயர் கலாநிதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆதி திராவிடர் நலத்துறை அமை மதிவேந்தன் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தோழி மகளிர் விடுதி கட்டப்பட உள்ள இடத்தைப் பார்வையிட்டு அதிகாரிகளுடன் ஆய்வு செய்தார்.நாமக்கல் திருச்சி ரோட்டில் உள்ள பழைய அரசு கால்நடை மருத்துவமனை வளாகத்தில் 1,320 சதுர மீட்டர் பரப்பளவில் தோழி மகளிர் விடுதி அமைய உள்ளது. பணிபுரியும் பெண்கள் தங்குவதற்கு தரை தளம் மற்றும் 4 தளத்துடன் 100 பேர் தங்குவதற்கான அமைக்கப்படுகிறது. அறைகள்36 பெண்கள் தங்கும் வகையில், இரு படுக்கைகள் கொண்ட அறை 18ம், 64 பேர் தங்கும் வகையில் 4 படுக்கைகள் கொண்ட அறைகள் 16ம் அமைக்கப்பட உள்ளது. மேலும் படிப்பதற்காக தனி அறை, கம்ப்யூட்டர் அறை, மாற்றுத்திறனாளிகளுக்கான அறை, சலவை இயந்திரத்துடன் கூடிய சலவை அறை, சோலார் மின்சார வசதி, செக்யூரிட்டி வசதி, டூ வீலர் மற்றும் 4 வீலர் பார்க்கி வசதியுடன் இந்த ஹாஸ்டல் அமைக்கப்பட உள்ளது.
Next Story



