திருச்செங்கோட்டில் திருப்பூர் குமரனின் 94 ஆவது நினைவேந்தல் நிகழ்ச்சிசட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரன் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை சிலம்பம் சுற்றிமாணவர்கள் வீரவணக்கம்

X
Tiruchengode King 24x7 |12 Jan 2026 12:14 AM ISTதிருச்செங்கோட்டில் கொடிகாத்தகுமரனின் 94 ஆவது நினைவேந்தல் நிகழ்ச்சியில் திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரன் பங்கேற்று திருப்பூர் குமரன் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். ஆதவன் சிலம்பப் பள்ளி மாணவ மாணவிகள் சிலம்பம்சுற்றி வீரவணக்கம் செலுத்தினர்
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் திருப்பூர் குமரனின் 94 ஆவது நினைவு நாளை முன்னிட்டு நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. திருச்செங்கோடு குமரன் கல்வி நிலையம் எதிரே நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு தேசிய சிந்தனை பேரவையின் தலைவர் திருநாவுக்கரசு தலைமை வகித்தார். திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினரும் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் ஈஸ்வரன் திருப்பூர் குமரனின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்தார். ஆதவன் சிலம்ப பயிற்சி மாணவ மாணவிகள் சிலம்பம் சுற்றி வீரவணக்கம் செலுத்தினர் திருப்பூர் குமரன் நாட்டின் கொடியை காத்து உயிர் தியாகம் செய்த போது அவருக்கு 29 வயது தான் என்றும் அவரது தியாகங்கள் என்னென்ன என்பது குறித்தும்இளைய சமூகம் அறிந்து கொள்ளும் வகையில் எடுத்துக் கூறப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் திருச்செங்கோடு முன்னாள் நகர மன்ற தலைவர் நடேசன் நாமக்கல் மேற்கு மாவட்ட கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் செயலாளர் ராயல் செந்தில்,மாவட்ட இணைச் செயலாளர்கள் லாவண்யா ரவி மைலீஸ்வரன் நகர செயலாளர்கள் அசோக்குமார் சேன்யோ குமார்,நகர் மன்ற உறுப்பினர் டிஎன் ரமேஷ், திமுக நிர்வாகிகள் அன்பு இளங்கோ ஹரிஹரன்,தேமுதிக மாநில செயற்குழு உறுப்பினர் ராஜேந்திரன் ஆகியோர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
Next Story
