காரில் ரூ.98 ஆயிரம் மதிப்புள்ள 191 கிலோ

காரில் ரூ.98 ஆயிரம் மதிப்புள்ள 191 கிலோ
X
போதை புகையிலை பொருட்கள் கடத்தியவர் கைது
நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சு.செல்வகுமார் உத்தரவின்பேரில், தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள் விற்பனை மற்றும் கடத்தலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், கிழக்கு கடற்கரை சாலையில் செல்லூரில் வெளிப்பாளையம் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை சந்தேகத்தின் பேரில் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். சோதனையில், தடை செய்யப்பட்ட 191 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் இருப்பது தெரிய வந்தது. இவற்றின் மதிப்பு ரூ.98 ஆயிரம் ஆகும். இதுகுறித்து, வெளிப்பாளையம் போலீசார் வழக்குப் பதிந்து, காரில் தடை செய்யப்பட்ட போதை புகையிலைப் பொருட்களை கடத்திய நாகை வெளிப்பாளையம் ஆரிய பத்திரப் பிள்ளை தெருவை சேர்ந்த ஸ்ரீநாத் (41) என்பவரை போலீசார் கைது செய்து, போதை புகையிலைப் பொருட்கள் மற்றும் காரை பறிமுதல் செய்தனர்.
Next Story