எக்ஸெல் கல்லூரியின் மாணவர்களின் நிலைமை நினைக்கும் போது அதிர்ச்சி அளிக்கிறது என கூறிய ABVP வட தமிழகத்தின் மாநில செயலாளர் யுவராஜ் தாமோதரன்.

X
NAMAKKAL KING 24X7 B |1 Nov 2025 7:25 PM ISTநாமக்கல் எக்ஸல் கல்லூரியில் விடுதியில் உணவருந்திய மாணவர்கள் உடல்நல குறைவால் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியளிக்கிறது. இது தொடர்பாக ABVP வட தமிழகத்தின மாநில செயலாளர் யுவராஜ் தாமோதரன் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கை.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் உள்ள எக்ஸல் கல்வி நிறுவனத்தின் விடுதியில் உணவருந்திய 400-க்கும் மேற்பட்ட மாணவர்கள் அவசர் சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருப்பது தமிழக மாணவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது லாபம் மட்டுமே இலக்காகக் கொண்டு செயல்படும் ஒரு சில சுயநலக் கல்வி நிறுவனங்களின் மிக மோசமான அலட்சியம் தான் இன்று நூற்றுக்கணக்கான மாணவர்களின் உயிரை பாதித்துள்ளது கல்லூரி வளாகத்தில் உணவுக் கூடம் (Mess) மற்றும் குடிநீர்த் தொட்டி ஆகியவை மிகவும் அசுத்தமாகவும், சுகாதாரமற்ற நிலையிலும் இருந்ததாக மாவட்ட நிர்வாகத்தின் ஆய்வில் தெரியவந்துள்ளது மாணவர்களுக்கு விஷம் கொடுத்தது போன்று புழுக்கள் நிறைந்த குடிநீரை வழங்கியிருப்பது மன்னிக்க முடியாத குற்றம்கல்லூரி நிர்வாகம் உணவுப் பாதுகாப்பு விதிகளை அப்பட்டமாக மீறியுள்ளது. மாணவர்களின் கல்விக்குக் கட்டணம் வசூலிக்கும் நிர்வாகம், அவர்களுக்கு அடிப்படை சுகாதாரத்தைக் கூட உறுதி செய்யத் தவறியது ஏன்?அண்மையில் சென்னை வேல் டெக் பல்கலைக்கழகம் சத்யபாமா பல்கலைக்கழம் உள்ளிட்ட பல்கலைக்கழக மாணவர்கள் விடுதியில் வழங்கப்படும் உணவில் புழுக்கள் இருந்ததாக போராட்டம் நடத்தினர். இன்னும் பல கல்லூரி பல்கலைக்கழகங்களில் இந்த நிலை தொடர்ந்து வருகிறது லட்சக்கணக்கில் கட்டணம் வசூல் செய்ய தெரிந்த இவர்களுக்கு சுத்தமான ஆரோக்கியமான உணவு வழங்க முடியவில்லை இப்படி அடிப்படை வசதிகளைகூட போராடி பெறவேண்டிய சூழ்நிலைக்கு மாணவர்களை தள்ளபடுகிறார்கள்.இந்த மோசமான சம்பவம் குறித்து மாவட்ட நிர்வாகம் துரிதமாக செயல்பட்டு பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு உயர்தர சிகிச்சை கிடைப்பதை உறுதி செய்யவேண்டும் மாணவர்களின் உடல்நலனுக்கு ஆபத்தை விளைவித்த இந்தக் கல்லூரி நிர்வாகம் மற்றும் அதற்குப் பொறுப்பானவர்கள் மீது உடனடியாகக் கிரிமினல் வழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட வேண்டும்.கல்வி நிறுவனங்கள் மாணவர்களின் எதிர்காலத்தைப் பாதுகாக்கும் கோவிலாக இருக்க வேண்டுமே தவிர, அவர்களின் உயிரைப் பறிக்கும் அச்சுறுத்தல் மையங்களாக மாறக் கூடாது இதில் முழுமையான தீர்வு கிடைக்கும்வரை ABVP தொடர்ந்து குரல் கொடுக்கும் களத்தில் போராடும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்!இந்த செய்திக் குறிப்பை வெளியிடுபவர் மாநில அலுவலகச் செயலாளர் ஸ்ரீதரன் கே.ஜி.இதுகுறித்து நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் இது சம்பந்தமாக ஏ பி பி யின் மாநில இணை செயலாளர் தீபக் தலைமையில் மனு அளிக்கப்பட்டது இதில் சேலம் கோட்ட அமைப்பாளர் ராமு மற்றும் நிர்வாகிகள் தமிழ் நரேந்திரா கார்த்தி சூர்யா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்
Next Story
